
தமிழ் மொழி இந்தியர்களின் மொழி - பிரதமர் மோடி பேச்சு
செய்தி முன்னோட்டம்
இந்திய பிரதமர் மோடி அவர்கள் ஜப்பான், ஆஸ்திரேலியா, பப்புவா நியூ கினியா உள்ளிட்ட 3 நாடுகளுக்கு அரசுமுறை பயணமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.
அந்த பயணங்களை முடித்து கொண்ட அவர் இன்று(மே.,25) அதிகாலை இந்தியா வந்தடைந்தார்.
டெல்லி விமான நிலையம் வந்திறங்கிய பிரதமர் மோடியினை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, கட்சி தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் தொண்டர்கள் ஒன்று கூடி உற்சாகமாக வரவேற்றனர்.
இதனை தொடர்ந்து விமான நிலைய வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய மோடி, உலகின் பழமைவாய்ந்த மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று.
தமிழ் மொழி நம்முடையது, ஒவ்வொரு இந்தியரின் மொழி தமிழ் ஆகும் என்று கூறினார்.
மோடி
ஜப்பான் ஜி 7 மாநாடு குறித்து மோடி
மேலும் பேசிய அவர், பப்புவா நியூ கினியாவில் டோக் பிசின் மொழிபெயர்ப்பின் 'திருக்குறள்' புத்தகத்தினை வெளியிடும் வாய்ப்பானது எனக்கு வழங்கப்பட்டது.
ஜப்பான் ஜி7 மாநாட்டில் உலக தலைவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைந்தேன்.
ஜீ20 மாநாடு குறித்து பலரும் பாராட்டி பேசினர்.
கொரோனா காலத்தில் இந்தியா எடுத்த முயற்சிகள் குறித்தும் பாராட்டிய நிலையில், தடுப்பூசிகளை வழங்கியது குறித்தும் கேள்வியெழுப்பினர்.
இந்தியா புத்தர், காந்தி பிறந்த நாடாகும்.
எதிரிகளுக்காகவும் நாம் கவலைப்படுகிறோம்.
ஏனென்றால் நாம் இரக்க குணம் கொண்டவர்கள்.
இந்தியாவின் பெருமை, பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தினை உலகமே போற்றுகிறது என்பதனை இந்த பயணத்தில் தெரிந்து கொண்டேன் என்று கூறியுள்ளார்.