Loading...
ஐபி அதிகாரி கொடூரக் கொலை! ஆம் ஆத்மி முன்னாள் நிர்வாகி தாஹிர் உசேனுக்கு ஆயுள் தண்டனை
தாஹிர் உசேனுக்கு ஆயுள் தண்டனை

ஐபி அதிகாரி கொடூரக் கொலை! ஆம் ஆத்மி முன்னாள் நிர்வாகி தாஹிர் உசேனுக்கு ஆயுள் தண்டனை

எழுதியவர் Sekar Chinnappan
Jul 31, 2026
07:11 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த 2020 ஆம் ஆண்டு வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட கலவரத்தின் போது, இந்தியாவின் உள்நாட்டு உளவு அமைப்பான மத்திய நுண்ணறிவுப் பிரிவு (ஐபி) அதிகாரி அங்கித் சர்மாவை கடத்தி கொடூரமாகக் கொலை செய்த வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் நிர்வாகி தாஹிர் உசேன் உட்பட 5 பேருக்கு டெல்லி கர் கர்டூமா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. தாஹிர் உசேன் தவிர நாசிம், காசிம், ஜாவேத் மற்றும் அனாஸ் ஆகிய நால்வருக்கும் இந்த ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்கள் இங்கே:-

நீதிமன்றம் மறுப்பு

மரண தண்டனை கோரிய காவல்துறை

இந்த வழக்கில் அனைத்துக் குற்றச்சாட்டுகளும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இது அரிதிலும் அரிதான வழக்கு என்பதால் தாஹிர் உசேன் உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என டெல்லி காவல்துறை தரப்பில் கடும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இருப்பினும், அனைத்துத் தரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதிபதி, குற்றவாளிகள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார்.

பின்னணி

ஐபி அதிகாரி அங்கித் சர்மா கொடூரக் கொலை பின்னணி

கடந்த 2020 பிப்ரவரி 25 அன்று பணி முடிந்து வீட்டிற்கு வந்த ஐபி அதிகாரி அங்கித் சர்மா, வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க வெளியே சென்ற போது சட்டவிரோதமாகக் கூடிய கும்பலால் கடத்தப்பட்டுக் கொடூரமாகக் கொல்லப்பட்டார்.

பின்னர் அவரது உடலை அடையாளம் தெரியாமல் மறைப்பதற்காக முகத்தில் ஆசிட் ஊற்றப்பட்டு, சாக்கடையில் வீசப்பட்டதாகக் காவல் துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி தாஹிர் உசேனைத் தங்களது கட்சியிலிருந்து உடனடியாக நீக்கியது.

ADVERTISEMENT

முறையீடு

உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கிறார் தாஹிர் உசேன்

நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தாஹிர் உசேன், "இந்த வழக்கு விசாரணை நியாயமாக நடைபெறவில்லை.

மேல்முறையீட்டிற்காக நாங்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகவுள்ளோம்.

உயர் நீதிமன்றத்தில் எங்களுக்குக் கண்டிப்பான நீதி கிடைக்கும் என்று நம்புகிறோம்." எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, தாஹிர் உசேனுக்கும் தங்களது கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை ஆம் ஆத்மி கட்சி மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது.

ADVERTISEMENT