மீண்டும் சனாதன தர்மம் குறித்து பேசிய தமிழக கவர்னர்; வைரலாகும் ட்வீட்
செய்தி முன்னோட்டம்
சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் அண்மையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார்.
டெங்கு, மலேரியா நோய்களை போல் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இவரது இக்கருத்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.
பலரும் உதயநிதிக்கு எதிராக கருத்துக்களை பதிவு செய்து வருவதோடு அவர் மீது பல இடங்களில் புகார் அளித்து வருகிறார்கள்.
ஆனாலும் மறுபுறம் அவருக்கு ஆதரவும் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ஆளுநர் மாளிகை X தளத்தில் ஓர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதில், "130 ஆண்டுகளுக்கு முன்னர் இதேநாளில் உலக சமய பாராளுமன்றத்தில் மனிதகுலத்தின் உலகளாவிய சகோதரத்துவம் என்னும் சனாதனத்தர்ம செய்தியினை உலகுக்கு ஸ்வாமி விவேகானந்தர் வழங்கினார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
embed
X தள பதிவு
130 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் உள்ள உலக சமயப் பாராளுமன்றத்தில் மனிதகுலத்தின் உலகளாவிய சகோதரத்துவம் என்ற சனாதன தர்ம செய்தியை உலகுக்கு வழங்கினார். காலத்தால் அழியாத இச்செய்தி இன்றைக்கும் மிகவும் பொருத்தமானது. pic.twitter.com/h0livSK2tl— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) September 11, 2023