
செம்பரப்பாக்கம் ஏரியிலிருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு 3,000 கனஅடியாக உயர்வு
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்துவரும் நிலையில் சென்னையிலுள்ள முக்கிய அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதோடு, அணைக்கு வரும் நீரின் வரத்தும் அதிகரிக்கிறது.
மேலும், தற்போது வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புயல் குறித்த முன்னெச்சரிக்கையினை வானிலை ஆய்வு மையம் அளித்துள்ளது.
அதற்கேற்ப சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதனை தொடர்ந்து கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை செம்பரப்பாக்கம் ஏரியில் திறந்துவிடப்படும் உபரிநீரின் அளவு வினாடிக்கு 3,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால் சென்னை அடையாறு கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாறி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட்டது
Watch | புயல் முன்னெச்சரிக்கை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு 3000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது!
— Sun News (@sunnewstamil) December 1, 2023
நீர் திறப்பு அதிகரித்திருப்பதால் அடையாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!#SunNews | #ChembarambakkamLake | #ChennaiRains pic.twitter.com/KZNus0sFWk