NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'எஸ்பிஐ வேண்டுமென்றே கீழ்ப்படியாமல் இருக்கிறது': உச்ச நீதிமன்றம் காட்டம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    'எஸ்பிஐ வேண்டுமென்றே கீழ்ப்படியாமல் இருக்கிறது': உச்ச நீதிமன்றம் காட்டம்

    'எஸ்பிஐ வேண்டுமென்றே கீழ்ப்படியாமல் இருக்கிறது': உச்ச நீதிமன்றம் காட்டம்

    எழுதியவர் Sindhuja SM
    Mar 11, 2024
    01:18 pm

    செய்தி முன்னோட்டம்

    நன்கொடையாளர்கள் மற்றும் தேர்தல் பத்திரங்களைப் பெறுபவர்கள் பற்றிய விவரங்களை மார்ச் 6-ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்ற கடந்த மாத உத்தரவை வேண்டுமென்றே பாரத ஸ்டேட் வங்கி பின்பற்றாமல் இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் இன்று கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது.

    மேலும், நாளைக்குள் தகவலை பகிராவிட்டால், அரசு நடத்தும் எஸ்பிஐ வங்கி மீது அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

    நாளைக்கு தகவலை பகிர்ந்த பிறகு, ஒரு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு இந்தியாவின் மிக பெரிய வங்கியான எஸ்பிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கூடுதலாக, வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குள் அனைத்து தேர்தல் பத்திர விவரங்களையும் அதன் இணையதளத்தில் வெளியிடுமாறு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்தியா 

    எஸ்பிஐக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை 

    "இந்த நேரத்தில், நீதிமன்ற அவமதிப்பு அதிகாரத்தை நாங்கள் பயன்படுத்த விரும்பவில்லை என்றாலும், இந்த உத்தரவில் சுட்டிக்காட்டப்பட்ட காலக்கெடுவின்படி வழிகாட்டுதல்களுக்கு இணங்கவில்லை என்றால், வேண்டுமென்றே கீழ்ப்படியாமல் இருப்பதற்காக இந்த நீதிமன்றம் எஸ்பிஐக்கு எதிராக அவமதிப்பு வழக்கு தொடரலாம் என்று எஸ்பிஐக்கு நாங்கள் நோட்டீஸை அனுப்புகிறோம்" என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

    தேர்தல் பத்திரங்கள் திட்டம் குறித்த விவரங்களை வெளியிட கூடுதல் அவகாசம் கோரிய பாரத ஸ்டேட் வங்கியின்(எஸ்பிஐ) கோரிக்கையை இன்று நிராகரித்த உச்ச நீதிமன்றம், அந்த விவரங்களை நாளைக்குள் இந்திய தேர்தல் ஆணையத்திடம்(இசிஐ) பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உச்ச நீதிமன்றம்
    எஸ்பிஐ
    இந்தியா

    சமீபத்திய

    போர்ப்பதற்றம் காரணமாக ஐபிஎல் 2025 தொடர் நிறுத்தம்; பிசிசிஐ அறிவிப்பு ஐபிஎல் 2025
    பாகிஸ்தான் விமானப்படையின் AWAC-ஐ நேற்றிரவு இந்தியா சுட்டு வீழ்த்தியது: அதன் சிறப்புகள் என்ன? இந்தியா
    பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியிலும் கெத்தாக நிற்கும் இந்திய பங்குச் சந்தைகள்; காரணம் என்ன? பங்குச் சந்தை
    இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் காரணமாக CA தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன தேர்வு

    உச்ச நீதிமன்றம்

    தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான மசோதா மக்களவையில் நிறைவேற்றம் நாடாளுமன்றம்
    முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வு காரணமாக முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை கேரளா
    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் முன்னாள் அமைச்சர் பொன்முடி  மு.க ஸ்டாலின்
    அதானி-ஹிண்டன்பர்க் வழக்கு: செபி விசாரணையை மாற்ற எந்த காரணமும் இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அதானி

    எஸ்பிஐ

    எஸ்பிஐ வங்கியுடன் இணைந்து கோ-பிராண்டட் கிரெடிட் கார்டுகளை அறிமுகப்படுத்தும் ரிலையன்ஸ் ரிலையன்ஸ்
    அரசியல் கட்சிகளால் பணமாக்கப்படாத தேர்தல் பத்திரங்கள் திரும்பப் பெறப்படும் தேர்தல் பத்திரங்கள்
    தேர்தல் பத்திரங்கள் பற்றிய தகவல்களை வழங்க கால அவகாசம் கோரியது எஸ்பிஐ  உச்ச நீதிமன்றம்
    தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் எஸ்பிஐயின் கோரிக்கையை இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்  டெல்லி

    இந்தியா

    இந்திய துருப்புக்களை திருப்பி அனுப்புவதாக கூறிய அதிபர் முய்சுவை கடுமையாக சாடும் மாலத்தீவு முன்னாள் அமைச்சர்  மாலத்தீவு
    'இந்திய அதிகாரிகள் கனடாவில் மிரட்டப்பட்டனர்': வெளியுறவு அமைச்சர்  கனடா
    திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் அடுத்த மாதம் முதல் அமலுக்கு வர வாய்ப்பு குடியுரிமை (திருத்த) சட்டம்
    "அரசாங்கத்தின் கண்கள் மூடப்பட்டுள்ளன": பொய்யாக விளம்பரம் செய்த பதஞ்சலி நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்  உச்ச நீதிமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025