Page Loader
கன்னியாகுமரி கடல் திடீரென உள்வாங்கியது - விவேகானந்தர் மண்டபத்திற்கான படகு சவாரி தாமதம் 
கன்னியாகுமரி கடல் திடீரென உள்வாங்கியது - விவேகானந்தர் மண்டபத்திற்கு படகு போக்குவரத்து தாமதம்

கன்னியாகுமரி கடல் திடீரென உள்வாங்கியது - விவேகானந்தர் மண்டபத்திற்கான படகு சவாரி தாமதம் 

எழுதியவர் Nivetha P
Jul 16, 2023
11:11 am

செய்தி முன்னோட்டம்

கன்னியாகுமாரி கடற்கரை சுனாமி ஏற்பட்டதற்கு பின்னர் உள்வாங்குதல், கடலின் நீர்மட்டம் உயருதல், கடலின் நிறம் மாறுதல், கடல் சீற்றம், அலையே இல்லாமல் காட்சியளிப்பது உள்ளிட்ட பல்வேறு மாறுதலுக்கு அவ்வப்போது உட்பட்டு வருகிறது. அமாவாசை, பவுர்ணமி தினங்களில் இதில் ஏதேனும் ஒரு மாற்றம் கடற்பகுதியில் ஏற்படுவது வழக்கம். அதன்படி நாளை அமாவாசை வருவதையொட்டி இன்று(ஜூலை.,16)காலை கடல் திடீரென ஒரு பக்கம் உள்வாங்கியுள்ளது, மற்றொரு பக்கம் கடல் சீற்றத்தோடு காணப்பட்டுள்ளது. இதன் காரணமாக, விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள வங்கக்கடல் பகுதியில் நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதனால் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு காலை 8 மணியளவில் துவங்கவேண்டிய படகு போக்குவரத்து துவங்கப்படவில்லை.

படகு 

10 அடி முதல் 15 அடி உயரம் வரை எழும்பும் கடல் அலை 

இதனால் படகு பயணம் மேற்கொள்ள ஆவலாக காத்துக்கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். அதன்பின்னர் 9 மணிக்கு மேல் கடல் சகஜநிலைக்கு திரும்பியதை உறுதிசெய்து கொண்டு ஒரு மணிநேரம் தாமதமாக இந்த படகு போக்குவரத்து துவங்கியது. சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சியுடன் படகு சவாரி மேற்கொண்டு வருகிறார்கள் என்று தெரிகிறது. இதனிடையே கன்னியாகுமரி முக்கடல் சங்கம பகுதியில் கடல் சீற்றம் காரணமாக சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கடல் சீற்றம் காரணமாக அருகிலுள்ள கடற்கரை கிராம பகுதிகளில் கடல் அலையானது 10 அடி முதல் 15 அடி உயரம் வரை எழும்பி வருகிறது என்று கூறப்படுகிறது.