
பெங்களுரு சிஇஓ தனது 4 வயது மகனை கொல்வதற்கு முன்பு எழுதிய கடிதம் குறித்த தகவல் வெளியானது
செய்தி முன்னோட்டம்
கோவா மாநிலத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் தனது நான்கு வயது மகனைக் கொன்றதாகக் கூறி கைது செய்யப்பட்ட சுசனா சேத்தின் கடிதம் ஐலைனரைப் பயன்படுத்தி எழுதப்பட்டது என்று கோவா காவல்துறை தெரிவித்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட பெண் தனது மகனின் உடலை வைத்திருந்த அதே பையில் தனது கடிதத்தையும் வைத்திருந்தார் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.
தனது பிரிந்த கணவரையும் தங்களது மகனையும் சந்தித்து கொள்ள அனுமதித்த நீதிமன்ற உத்தரவினால் தனக்கு ஏற்பட்ட மனவேதனை குறித்து சுசனா சேத் அந்த கடிதத்தில் எழுதி இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
தனது மகனின் பொறுப்பு முழுவதும் தன்னிடம் மட்டுமே ஒப்படைக்கப்பட வேண்டும் என்று சுசனா சேத் விரும்பி இருக்கிறார்.
டக்லக்வெஞ்
சுசனா சேத்துக்கு மருத்துவ பரிசோதனை
ஆனால், அது நடக்கவில்லை என்றதும் அவர் தனது 4 வயது மகனை கொன்றதாக கூறப்படுகிறது.
"நீதிமன்றம் எங்களுக்கு விவாகரத்து வழங்கியாலும், என் மகனின் பொறுப்பு முழுவதும் என்னிடம் மட்டுமே இருக்க வேண்டும்" என்று அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்ட பெங்களுரு சிஇஓ சுசனா சேத், வியாழக்கிழமை காவல்துறையின் மேற்பார்வையில் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
சுசனா சேத், கோவாவில் வைத்து தனது நான்கு வயது மகனைக் கொன்றுவிட்டு, அவனது சடலத்துடன் கர்நாடகாவுக்குச் செல்லும் வழியில் சில நாட்களுக்கு முன் பிடிபட்டார்.
சுசனா சேத்தை எப்படி போலீஸார் திறமையாக பிடித்தனர் என்பதன் முழு விவரமும் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.