
ப்ளஸ் 2 தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் எடுத்த நந்தினி தமிழக முதல்வருடன் சந்திப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு ப்ளஸ் 2 தேர்வு முடிவுகளை நேற்று(மே.,8) பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.
அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தினை சேர்ந்த நந்தினி என்னும் மாணவி 600க்கு 600 என்று முழு மதிப்பெண்களை எடுத்து தேசியளவில் சாதனை படைத்துள்ளார்.
இதனையடுத்து தச்சு தொழிலாளி மகளான நந்தினி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் இன்று(மே.,9)தனது குடும்பத்தார் மற்றும் பள்ளி தலைமையாசிரியையோடு சென்று வாழ்த்துக்களை பெற்றுள்ளார்.
அப்போது ஸ்டாலின் அவர்கள், 'எங்களுக்கு ரொம்ப பெருமையா இருக்கு.
என்ன உதவி வேண்டுமானாலும் சொல்லுங்கள் பண்ண ரெடியா இருக்கோம் என்று உறுதியளித்துள்ளார்.
மேலும் அவர் நந்தியின் தந்தை மற்றும் தம்பியுடனும் பேசி நலம் விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#Watch | "எங்களுக்கு ரொம்ப பெருமையா இருக்கு.. எந்த உதவி வேணாலும் பண்ண ரெடியா இருக்கோம்"
— Sun News (@sunnewstamil) May 9, 2023
600/600 மதிப்பெண்கள் எடுத்து வரலாற்று சாதனை படைத்த திண்டுக்கல் மாணவி நந்தினிக்கு உறுதியளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!#SunNews | #12thResults | #Nandhini | @mkstalin pic.twitter.com/L34OCnOeoD