
மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
செய்தி முன்னோட்டம்
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 பொதுத் தேர்வுகளின் முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 28 முதல் ஏப்ரல் 15 வரை நடைபெற்றன. இந்தத் தேர்வில் மொத்தம் 9,13,036 பேர் எழுதியுள்ளனர்.
விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 22 முதல் 30 வரை நடைபெற்ற நிலையில், முடிவுகள் இன்று வெளியாகிறது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இன்று காலை 9:00 மணிக்கு பத்தாம் வகுப்பு மற்றும் மதியம் 2:00 மணிக்கு பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை https://results.digilocker.gov.in, https://results.digilocker.gov.in மற்றும் www.tnresults.nic.in, https://www.tnresults.nic.in ஆகிய இணையதளங்களில் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட தகவல்களை பயன்படுத்தி அறிந்து கொள்ளலாம்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING | தமிழ்நாட்டில் 10, 11ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது!
— Sun News (@sunnewstamil) May 16, 2025
தேர்வு முடிவுகளை,
🔗 https://t.co/ci2xR8kuAG,
🔗 https://t.co/i8WL72wnYL இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்!#SunNews | #10thExamResults | #TNSchools pic.twitter.com/UFo5XCWMjp