Page Loader
தமிழக மீனவர்கள் 40 பேரை விடுவித்தது இலங்கை 

தமிழக மீனவர்கள் 40 பேரை விடுவித்தது இலங்கை 

எழுதியவர் Sindhuja SM
Jan 20, 2024
11:04 am

செய்தி முன்னோட்டம்

பிரதமர் மோடி நாளை இராமேஸ்வரம் வர இருக்கிறார். இதனையடுத்து, இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கும் படி இலங்கை அரசிடம் பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அந்த வேண்டுகோளுக்கு இணங்க இலங்கையின் வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் சிறைகளில் உள்ள 40 தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இன்று காலை 10 மணியளவில் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் ஆஜராகிய இந்திய தூதுரக வழக்கறிஞர்கள், தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி மனு அளித்துள்ளனர். இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 22 பேர், பாம்பன் மீனவர்கள் 18 பேர் என மொத்தம் 40 தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

தமிழக மீனவர்கள் 40 பேரை விடுவித்தது இலங்கை