Page Loader
தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
அவர்களிடம் இருந்த 4 விசைப்படகுகளும் கைப்பற்றப்பட்டிருக்கிறது.

தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

எழுதியவர் Sindhuja SM
Jun 22, 2023
10:59 am

செய்தி முன்னோட்டம்

நெடுந்தீவு அருகே ஆழ்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை நேற்று இரவு கைது செய்திருக்கிறது. மீன் பிடி தடைக்கலாம் கடந்த வாரம் முடிவடைந்த நிலையில், இந்த ஒரு வாரமாக மீனவர்கள் தொடர்ந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்று கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், நேற்று நெடுந்தீவு அருகே ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றிருந்த மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படை அவர்களை கைது செய்திருக்கிறது. முதலில் 21 பேர் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது மேலும் 4 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. மேலும், அவர்களிடம் இருந்த 4 விசைப்படகுகளும் கைப்பற்றப்பட்டிருக்கிறது. இந்த 25 மீனவர்களும் புதுக்கோட்டை, நாகை மற்றும் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

சி ஜே

இரண்டு நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்ட 9 தமிழக மீனவர்கள் 

ஜூன் 19ஆம் தேதி 9 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, அதற்கு அடுத்த நாள் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது, நெடுந்தீவுக்கு 9 மீனவர்களுடன் சென்ற அந்தோணி என்பவரது மீன் பிடி படகு பழுது காரணமாக இலங்கை கடல் எல்லைக்குள் சென்றது. அந்தநேரம் பார்த்து அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தை சேர்ந்த 9 மீனவர்களை கைது செய்து, காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றது. அதற்கு பின்னர், அவர்கள் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த இலங்கை நீதிபதி, படகு பழுதான விஷயத்தை அறிந்த பிறகு அந்த 9 மீனவர்களையும் ஜூன் 20ஆம் தேதி விடுவித்தனர்.