Page Loader
வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்: முழு விவரம்
பயணிகள் வசதிக்காகச் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்: முழு விவரம்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 30, 2024
10:34 am

செய்தி முன்னோட்டம்

முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காகச் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,"ஆகஸ்ட் 30ம் தேதி முகூர்த்தம் நாள், சனி மற்றும் ஞாயிறு வார விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்தும் மற்ற ஊர்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது". "இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து சேவைகள்

பேருந்துகள் எங்கிருந்து இயக்கப்படுகிறது

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ஊர்களுக்கு வெள்ளிக்கிழமை 355 பேருந்துகளும், சனிக்கிழமை 360 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளிக் கிழமை 75 பேருந்துகளும், சனிக்கிழமை 75 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதோடு பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.