
சென்னைக்கான பட்ஜெட்டில் பள்ளி மாணவர்களுக்கு மாலை ஸ்நாக்ஸ் திட்டம்
செய்தி முன்னோட்டம்
சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட் கடைசியாக 2016ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதன் பின்னர் உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாத காரணத்தினால் பட்ஜெட் தாக்கல் செய்யப்படாமல் இருந்துள்ளது.
தற்போது தேர்தல் நடத்தப்பட்டு சென்னை மேயராக பிரியா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர் பதவியேற்ற பின்னர் 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட்டினை கடந்த ஏப்ரல் மாதம் தாக்கல் செய்தார்.
அந்த பட்ஜெட் தாக்கலில் அவர் காலை சிற்றுண்டி திட்டம் விரிவுபடுத்தல், பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல் போன்ற 67 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்.
அதில் பெரும்பாலான திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், சில திட்டத்தின் பணிகள் துவங்கப்பட்டு நடந்து வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
ஜனவரி முதல் அமல்
மாணவர்களுக்கு ஸ்நேக்ஸ் கொடுக்க ரூ.1 கோடி ஒதுக்கீடு
இந்நிலையில் தற்போது சென்னை மாநகராட்சியின் 2023-24ம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டங்கள் குறித்த திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையினை சென்னை மேயரான ப்ரியா தாக்கல் செய்துள்ளார்.
இந்த திட்ட அறிக்கையில் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அதன் படி, பள்ளியில் மாணவர்களுக்கு மாலையில் நொறுக்கு தீனி(ஸ்நாக்ஸ்) கொடுக்க சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மாலை நேர வகுப்பு மற்றும் குறைதீர் கற்பித்தல் வகுப்பில் பங்கேற்று பயிலும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டில் ஜனவரி மாதம் முதல் ஸ்நேக்ஸ் கொடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.