'சிறப்பு கூட்டத்தொடரில் வரலாற்று முடிவுகள் எடுக்கப்படும்': பிரதமர் மோடி
செய்தி முன்னோட்டம்
இன்று தொடங்கும் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் "சுருக்கமாக இருந்தாலும், அதில் பெரிய நிகழ்வுகள் நடக்கும்" என்று கூறிய பிரதமர் நரேந்திர மோடி, இது "வரலாற்று முடிவுகளின்" கூட்டமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
சிறப்பு கூட்டத்தொடரின் அமர்வுக்கு சற்று முன் பேசிய பிரதமர் மோடி, சந்திரயான் மற்றும் ஜி20 ஆகியவை தேசத்திற்கு பெரிய சாதனைகள் என்று எடுத்துத்துரைத்தார்.
மேலும், "GSLV Mk III-M1இன் முன்னோடியில்லாத வெற்றி இந்தியாவின் பன்முகத்தன்மையின் கொண்டாட்டமாகும்" என்று அவர் கூறினார்.
G20இன் வெற்றியும் ஒருமித்த கருத்தும் இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்திற்கான செய்தி என்று பிரதமர் மேலும் கூறினார்.
சிறப்பு நாடாளுமன்ற அமர்வின் சிறப்பு அம்சம் குறித்து பேசிய அவர், நாட்டின் 75 ஆண்டுகால பயணம் புதிதாக தொடங்கியுள்ளது என்று தெரிவித்தார்.
cbahjk
'அழுவதற்கும் சிணுங்குவதற்கும் நிறைய நேரம் இருக்கிறது': எதிர்க்கட்சிகளை சாடிய பிரதமர்
"இது ஒரு குறுகிய அமர்வு. எம்.பி.க்களின் அதிகபட்ச நேரத்தை உற்சாகமான சூழலுக்கு ஒதுக்க வேண்டும். வாழ்க்கையில் அழுவதற்கும் சிணுங்குவதற்கும் நிறைய நேரம் இருக்கிறது. வாழ்க்கையில் சில தருணங்கள் உங்களை உற்சாகத்தாலும் நம்பிக்கையாலும் நிரப்புகின்றன. நான் இந்த குறுகிய அமர்வை அப்படித்தான் பார்க்கிறேன்." என்று பிரதமர் மோடி மேலும் பேசி இருக்கிறார்.
நாடாளுமன்ற அமர்வில் தொடர்ந்து அமளி செய்து போராட்டங்களை நடத்தி வந்த எதிர்கட்சிகளை சாடிய பிரதமர் மோடி இதை கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் ஐந்து நாள் சிறப்புக் கூட்டத்தொடர் இன்று(செப்டம்பர் 18) தொடங்கியது.
இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பெரும் அறிவிப்புகள் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், அதை உண்மையாக்கும் வகையில் பிரதமர் மோடியம், இது "வரலாற்று முடிவுகளின்" கூட்டமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.