LOADING...
பதவியில் இருந்தபோதே தேர்தலில் தோற்ற தமிழக முதலமைச்சர்கள் யார் யார்? ஒரு முழுமையான பட்டியல்!
பதவியில் இருந்தபோதே தேர்தலில் தோற்ற தமிழக முதலமைச்சர்கள்

பதவியில் இருந்தபோதே தேர்தலில் தோற்ற தமிழக முதலமைச்சர்கள் யார் யார்? ஒரு முழுமையான பட்டியல்!

எழுதியவர் Sekar Chinnappan
May 04, 2026
09:38 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத் தேர்தல் களம் எப்போதும் எதிர்பாராத திருப்பங்களுக்குப் பெயர் பெற்றது. ஒரு மாநிலத்தின் உச்சபட்ச அதிகாரத்தில் இருக்கும் முதலமைச்சரே, தனது சொந்தத் தொகுதியில் மக்களால் நிராகரிக்கப்படுவது என்பது அந்த ஆட்சியின் மீதான அதிருப்தியை அல்லது ஒரு மிகப்பெரிய அரசியல் அலையைக் குறிப்பதாக அமைகிறது. 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத்தேர்தல் தொடங்கி 2026 ஆம் ஆண்டு தேர்தல் வரை, நான்கு முறை இத்தகைய வரலாற்றுச் சுவடுகள் பதிவாகியுள்ளன. இந்தத் தோல்விகள் ஒவ்வொன்றும் தமிழக அரசியலின் போக்கை மாற்றியமைத்த மிக முக்கியமான தருணங்களாகக் கருதப்படுகின்றன.

தொடக்க காலத் தோல்விகள்

பி.எஸ்.குமாரசாமி ராஜா மற்றும் பக்தவத்சலம்

தமிழ்நாடு முன்பு மெட்ராஸ் மாகாணமாக இருந்தபோது சுதந்திரத்திற்கு பிந்தைய முதல் பொதுத்தேர்தல் 1952ல் நடைபெற்றது. அப்போதைய முதலமைச்சராக இருந்த பி.எஸ்.குமாரசாமி ராஜா ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் போட்டியிட்டு சுயேச்சை வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். இது சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலிலேயே ஒரு முதலமைச்சர் தோற்ற முதல் நிகழ்வாகப் பதிவானது. அதனைத் தொடர்ந்து, 1967ல் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் கடைசி முதலமைச்சரான எம்.பக்தவத்சலம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். இந்தத் தோல்வியானது தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியின் வீழ்ச்சிக்கும், திராவிடக் கட்சிகளின் எழுச்சிக்கும் ஒரு தொடக்கமாக அமைந்தது.

பர்கூர் தந்த அதிர்ச்சி

1996ல் ஜெயலலிதாவின் தோல்வி

சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு, 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மற்றுமொரு மிகப்பெரிய அரசியல் அதிர்ச்சி ஏற்பட்டது. அப்போதைய முதலமைச்சராக இருந்த ஜெ.ஜெயலலிதா, தருமபுரி மாவட்டத்தின் பார்கூர் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். அவர் திமுக வேட்பாளர் இ.ஜி.சுகவனத்திடம் வெறும் 8,366 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தனது தொகுதியை இழந்தார். அந்தத் தேர்தலில் அதிமுக மாநிலம் முழுவதும் மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்ததுடன், ஒரு முதலமைச்சர் தனது தொகுதியிலேயே தோற்றது அக்கட்சியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Advertisement

கொளத்தூர் யுத்தம்

2026ல் மு.க.ஸ்டாலின் சந்தித்த பின்னடைவு

தமிழகத் தேர்தல் வரலாற்றின் சமீபத்திய மற்றும் மிகப்பெரிய அதிர்ச்சியாக 2026-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள் பார்க்கப்படுகின்றன. தற்போதைய முதலமைச்சராக இருக்கும் மு.க.ஸ்டாலின், தனது சொந்தத் தொகுதியான கொளத்தூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் தோல்வியடைந்தார். கடந்த மூன்று தேர்தல்களாக இதே தொகுதியில் வெற்றி பெற்று வந்த ஸ்டாலின், முதன்முறையாக ஒரு புதிய அரசியல் சக்தியிடம் தனது கோட்டையை இழந்துள்ளார். ஒரு சிட்டிங் முதலமைச்சர் தனது தொகுதியில் தோல்வியடைவது 1996க்குப் பிறகு இதுவே முதல் முறையாகும்.

Advertisement

தோல்வி உணர்த்தும் பாடம்

தமிழக அரசியலில் முதலமைச்சர்களின் தோல்வி உணர்த்தும் பாடம்

ஒரு முதலமைச்சரின் தோல்வி என்பது தனிப்பட்ட ஒரு நபரின் தோல்வியாகப் பார்க்கப்படாமல், ஒட்டுமொத்த அரசாங்கத்தின் மீதான மக்களின் தீர்ப்பாகவே அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகிறது. 1967ல் பக்தவத்சலம் அல்லது 1996ல் ஜெயலலிதா மற்றும் தற்போது 2026ல் மு.க.ஸ்டாலின் ஆகியோரது தோல்விகள், தமிழக மக்கள் மாற்றத்தை விரும்பும்போது எவ்வளவு பெரிய ஆளுமையாக இருந்தாலும் தயங்காமல் நிராகரிப்பார்கள் என்பதை உணர்த்துகின்றன. அதிகார பலத்தையும் தாண்டி, மக்களின் தேவைகளும் உணர்வுகளுமே தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கின்றன என்பதற்கு இந்த நான்கு முதலமைச்சர்களின் தோல்வி வரலாறு ஒரு மிகச்சிறந்த சான்றாகும்.

Advertisement