Page Loader
மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசனை சந்தித்த சிங்கப்பூர் தூதரக அதிகாரிகள் 
மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசனை சந்தித்த சிங்கப்பூர் தூதரக அதிகாரிகள்

மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசனை சந்தித்த சிங்கப்பூர் தூதரக அதிகாரிகள் 

எழுதியவர் Nivetha P
Oct 17, 2023
07:07 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ் சினிமா நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசனை சென்னைஆழ்வார்பேட்டை பகுதியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று(அக்.,17) சிங்கப்பூர் தூதரக அதிகாரிகள் சந்தித்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, சிங்கப்பூர் தூதரக தலைமை அதிகாரி பங் டிஸ் சியாங் எக்டர், தூதரகத்தின் துணை அதிகாரியான பசில் டிங் உள்ளிட்டோர் இந்த சந்திப்பில் கமலிடம் பேசினர். இந்த சந்திப்பின் பொழுது இவர்கள், இந்தியா நாட்டின் கலாச்சாரம் குறித்து பேசியதாக தெரிகிறது. மேலும், தமிழ்நாடு மாநிலத்தின் கலாச்சாரம், பண்பாடு, வர்த்தகம் குறித்து பேசிய அவர்கள், தமிழ்நாடு அரசியல் விவகாரங்கள் குறித்தும் கலந்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

மக்கள் நீதி மய்யம்