வீட்டு வேலையை செய்ய மாணவர் உருவாக்கிய ரோபோ - அசத்தலான கண்டுப்பிடிப்பு!
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின், மேற்கு வங்கம் பாக்டோக்ராவை சேர்ந்த தேபாசிஷ் தத்தா என்ற மாணவர் வீட்டு வேலைகளை செய்யும் ரோபோ ஒன்றை உருவாக்கி அசத்தி இருக்கிறார்.
இந்த மாணவர் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த மாணவருக்கு சிறுவயதில் இருந்தே புரொபஸர் கோன் கதாபாத்திரம் பிடித்ததால், விதுசேகர் என்ற ரோபோ ஒன்றை உருவாக்கியுள்ளார்.
இந்த ரோபோ ஆனது உணவு மற்றும் தண்ணீரை டெலிவரி செய்கிறது. இதுமட்டுமின்றி வீட்டிற்கு வரும் விருந்தினர்களையும் வரவேற்று உணவு அளிக்கவும் இது செயல்படுகிறது.
வீட்டு வேலை செய்யும் ரோபோ
குறைந்த செலவில் ரோபோ உருவாக்கிய பாலிக்டெக்னிக் மாணவர்
ப்ளூடுத் மூலம் இயக்கப்படும் இந்த ரோபோ ஆனது அன்றாட பணிகளை செய்கிறது.
தேபாசிஷ் மாணவர் இதனை குப்பையில் தூக்கி எறியப்பட்ட பொருட்களை பயன்படுத்தி c-programming மூலம் உருவாக்கியுள்ளார்.
இதுகுறித்து பேசிய மாணவர் தேபாசிஷ், இந்த விதுசேகர் ரோபோவை உருவாக்க தனக்கு இரண்டு மாதங்கள் தேவைப்பட்டதாகவும், சில சர்க்யூட்களை வாங்கி பயன்படுத்தியதாகவும், மீதமுள்ள பொருட்கள் 2000 ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்காலத்தில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிறந்த ரோபோக்களை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். ரோபோ தயாரிப்பு வணிகத்தை உருவாக்கவும் ஆர்வமாக உள்ளார் தேபாஷிஷ்.