
வைரல் வீடியோ: பெண் காவலரைத் தள்ளிவிட்ட பாஜக தலைவர்
செய்தி முன்னோட்டம்
ஒடிசாவின் சம்பல்பூரில் நடைபெற்ற பாஜக போராட்டத்தில், லஞ்சம் வாங்கியதாகக் குற்றம்சாட்டி, பெண் காவல்துறை அதிகாரியைத் தாக்கியதாக ஒடிசாவின் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயநாராயண் மிஸ்ராவின் மீது புகார் எழுந்துள்ளது.
இந்த குற்றசாட்டுகளை முற்றிலுமாக மறுத்த சம்பல்பூரின் பாஜக MLA, தனுபாலி காவல் நிலையப் பொறுப்பாளர் அனிதா பிரதான் என்பவர் தான் தன்னைத் தள்ளிவிட்டதாகக் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக இருவரும் காவல்துறையில் புகார் அளித்ததுள்ளனர்.
"மோசமடைந்து வரும் சட்டம் ஒழுங்கு நிலைமை" குறித்து ஒடிஷா மாநிலம் முழுவதும் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, சம்பல்பூரில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியே நேற்று(பிப் 15) நடைபெற்ற பாஜகவின் போராட்டத்தின் போது தான் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
ட்விட்டர் அஞ்சல்
வைரலாகும் ஒடிஷா MLAவின் வீடியோ
"She Pushed Me, I Didn't": Odisha BJP MLA Amid Cop's Charge, Viral Video https://t.co/sTLXBNrsTT pic.twitter.com/TcpjDXzToH
— NDTV (@ndtv) February 16, 2023