தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகினார் சரத் பவார்
செய்தி முன்னோட்டம்
மகாராஷ்டிராவின் மூத்த அரசியல்வாதியான சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின்(NCP) தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக இன்று(மே 2) அறிவித்தார்.
அவருக்குப் பின் கட்சித் தலைவராக யார் பொறுப்பேற்க போகிறார் என்பது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகினாலும், அரசியலில் இருந்து இப்போதைக்கு ஓய்வு பெற போவதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
நான்கு முறை மகாராஷ்டிர முதலமைச்சராக இருந்த சரத் பவார், மும்பையில் நடந்த தனது சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில், இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அவரது இந்த முடிவுக்கு NCP தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
details
பாஜகவில் சேர போகிறாரா அஜித் பவார்?
அக்கட்சித் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள், சரத் பவார் தனது முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அவர் தனது முடிவை திரும்பப் பெறாவிட்டால், புத்தக வெளியீட்டு விழா நடக்கும் இடத்தை விட்டு வெளியேற மாட்டோம் என்று அவர்கள் கூறினர்.
சரத் பவார் தனது ராஜினாமாவை அறிவிப்பதற்கு முன் யாரிடமும் அது பற்றி கூறவில்லை என்று NCPயின் உயர்மட்ட தலைவரும் ராஜ்யசபா எம்பியுமான பிரபுல் படேல் கூறியுள்ளார்.
சரத் பவாரின் மருமகனும், முன்னாள் துணை முதலமைச்சருமான அஜித் பவார் பாஜகவில் சேர போகிறார் என்று எழுந்த சலசலப்புகளுக்கு மத்தியில், சரத் பவார் தனது ராஜினாமாவை அறிவித்துள்ளார்.