சபரிமலையில் முதியவர்கள், சிறுவர்களுக்கு தனிவரிசை அமல்
சபரிமலையில் மண்டல, மகர விளக்கு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதனால், கூட்டம் அலை மோதி கொண்டிருக்கிறது. கடந்த 32 நாட்களில் மட்டும் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம் செய்திருக்கின்றனர். மண்டல பூஜை முடிவதற்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் சூழ்நிலையில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்த அளவு சரிமலைக்கு கூட்டம் வருவது இதுவே முதல் முறை. இதற்காக சமீபத்தில் பக்தர்கள் எண்ணிக்கைக் குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் செல்வதற்கு முதியவர்களுக்கும் சிறுவர்களுக்கும் தனி வரிசை அமல்படுத்தப்பட்டிருக்கிறது.
கூட்ட நெரிசலில் சிக்கும் பக்தர்கள்!
பக்தர்கள் எந்த சிரமும் இல்லாமல் சாமி தரிசனம் செய்ய திருவாங்கூர் தேவஸ்தானம் பல நடவடிக்கைளை சமீபத்தில் எடுத்து வருகிறது. அதிக கூட்டத்தால் பக்தர்கள் தத்தளித்ததால் முன்பதிவு ஆட்கள் குறைப்பு அமல்படுத்தப்பட்டது. அதன்படி, ஒரு நாளுக்கு 90 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். அண்மையில், கூட்டம் அதிகமாக இருப்பதால் சிறுவர்களும் 60 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் முதியவர்களும் வரிசையில் நிற்கமுடியாமல் சிரமப்படுவதாக ஒரு புகார் எழுந்தது. இதனையடுத்து, தேவஸ்தான அமைச்சர் கெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்றது. இதற்கு பின், முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஒரு தனிவரிசை ஏற்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இன்றிலிருந்து சபரிமலைக்கு வரும் சிறுவர்கள் மற்றும் முதியவர்களுக்கு ஒரு தனி வரிசை அமல்படுத்தப்படுகிறது.