Page Loader
ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பு மனுதாக்கல்
ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பு மனுதாக்கல்

ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பு மனுதாக்கல்

எழுதியவர் Nivetha P
Aug 29, 2023
02:00 pm

செய்தி முன்னோட்டம்

செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி கடந்த ஜூலை 17ம் தேதி காவேரி மருத்துவமனையிலிருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். இதனிடையே அவரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறையினர் உச்ச நீதிமன்றம் மற்றும் சென்னை முதன்மை நீதிமன்ற அனுமதியோடு 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவர் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றோடு(ஆகஸ்ட்.,28) நிறைவுபெறும் பட்சத்தில், எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

ஜாமீன் 

அவசர வழக்காக விசாரிப்பது குறித்து பரிசீலனை 

அப்போது அவருக்கு வரும் செப்டம்பர் 15ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்வதாகக்கூறி நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து அடுத்த காவல் நீடிப்பிற்கு செந்தில் பாலாஜி நேரில் ஆஜராகவேண்டியதில்லை, காணொளிக்காட்சி மூலம் ஆஜரானால் போதுமானது என்றும் கூறினார். மேலும், செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. அவ்வாறு தாக்கல் செய்யப்படும் பட்சத்தில் அந்த மனுவினை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்க முடியாது என்று கூறிய நீதிபதி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன்மனுவை தாக்கல் செய்யுமாறு நேற்று(ஆகஸ்ட்.,28)அறிவுறுத்தியிருந்தார். இந்நிலையில் இன்று(ஆகஸ்ட்.,29)சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு கோரியுள்ளார். இந்த மனுவினை அவசர வழக்காக விசாரிப்பது குறித்து நீதிபதி.அல்லி பரிசீலனை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.