
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு - அக்.,30ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை
செய்தி முன்னோட்டம்
சட்ட விரோத பண பரிவர்த்தனை செய்ததாக அமலாக்கத்துறை கடந்த ஜூன் 14ம் தேதி செந்தில் பாலாஜியை கைது செய்தது.
அதன்படி இந்த வழக்கின் குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்கள் கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி சென்னை முதன்மை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அதன்படி புழல் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி சென்னை முதன்மை நீதிமன்றத்தில் 2 முறை தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் நீதிமன்றம் அந்த 2 முறையும் அவரது ஜாமீன் மனுவினை தள்ளுபடி செய்தது.
இதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தனது ஜாமீன் மனுவினை தாக்கல் செய்தார்.
கைது
மேல்முறையீடு ஜாமீன் மனு தாக்கல்
அம்மனுவில், 'உடல்நிலை சரியில்லாமல் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், முழுமையாக அவர் குணமடையவில்லை. மீண்டும் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
கடந்த 19ம்.,தேதி இந்த மனு மீதான விசாரணையினை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது.
அப்போது, 'உடல்நிலை மற்றும் மருத்துவ காரணங்களை முன்வைத்து ஜாமீன் கோருவதை ஏற்க முடியாது' என்றுக்கூறி சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி இந்த ஜாமீன் மனுவினை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.
அதனையடுத்து, செந்தில் பாலாஜி தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
இதனை அவசர வழக்காக விசாரிக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், அதனை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
அதனை தொடர்ந்து, இந்த மனு மீதான விசாரணை வரும் அக்.,30ம் தேதி திங்கட்கிழமை நடக்கவுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.