Page Loader
மணிப்பூரில் பாதுகாப்பு படையினர் மீது பதுங்கி இருந்து தாக்குதல் நடத்திய கிழச்சியாளர்கள்: ஒரு வீரர் பலி 

மணிப்பூரில் பாதுகாப்பு படையினர் மீது பதுங்கி இருந்து தாக்குதல் நடத்திய கிழச்சியாளர்கள்: ஒரு வீரர் பலி 

எழுதியவர் Sindhuja SM
Jul 14, 2024
02:25 pm

செய்தி முன்னோட்டம்

இன்று மணிப்பூரின் ஜிரிபாமில் பாதுகாப்பு படையினர் மீது ஆயுதமேந்திய மர்ம நபர்கள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தியதால் மத்திய ரிசர்வ் போலீஸ் படை( CRPF ) வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். 20வது பட்டாலியன் CRPF மற்றும் மணிப்பூர் காவல்துறையினர் அடங்கிய கூட்டு குழு மீது அடையாளம் தெரியாத ஆயுதம் ஏந்திய நபர்கள் இன்று காலை 9:40 மணியளவில் தாக்குதல் நடத்தினர். மே 2023 இல் தொடங்கிய இனக்கலவரங்களுக்கு பிறகு, மணிப்பூரில் பாதுகாப்பு நிலைமை மோசமாக இருப்பதால் இந்த தாக்குதல் நடந்தது.

மணிப்பூர் 

பீகாரைச் சேர்ந்த 43 வயதான அஜய் குமார் பலி 

ஜூலை 13 அன்று நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்வதற்காக ஒருங்கிணைந்த பாதுகாப்புக் குழு மோன்பங் கிராமத்தை நெருங்கிக்கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்தது. கொல்லப்பட்ட CRPF ஜவான் பீகாரைச் சேர்ந்த 43 வயதான அஜய் குமார் ஜா என அடையாளம் காணப்பட்டுள்ளார். காயமடைந்த மூன்று நபர்களில் ஜிரிபாம் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஒரு சப்-இன்ஸ்பெக்டர் (SI) அடங்குவதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.