
தென்காசி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக வரலாறு காணாத கனமழை கொட்டியது.
இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளம் ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதோடு, பாலங்களும் வெள்ளநீரால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்கள் உடமைகளை இழந்து, இயல்புநிலைக்கு திரும்ப முடியாமல் தவிக்கிறார்கள்.
இந்நிலையில், மழை எச்சரிக்கை காரணமாகவும், பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நிற்பதாலும் தென்காசி மாவட்டத்தில் நாளை(டிச.,20)பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் திட்டமிட்டப்படி அரையாண்டு தேர்வு நடக்கும் என்று முதன்மை கல்வி அலுவலரின் உத்தரவு திரும்ப பெறப்படுகிறது.
இதற்கிடையே, கனமழை மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக ஏற்கனவே தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
பள்ளிகளுக்கு விடுமுறை
#JUSTIN | தென்காசியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திட்டமிட்டபடி அரையாண்டு தேர்வு நடக்கும் என்று முதன்மை கல்வி அலுவலர் அறிவித்திருந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டது https://t.co/n8uWESzg2m
— Sun News (@sunnewstamil) December 19, 2023