LOADING...
நாளை மின்தடை அறிவிப்பு: முக்கிய மாவட்டங்களின் முழு விபரம்!
நாளை தமிழகத்தின் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்

நாளை மின்தடை அறிவிப்பு: முக்கிய மாவட்டங்களின் முழு விபரம்!

எழுதியவர் Vasuki
Jun 09, 2026
12:24 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாடுகளுக்கு மத்தியில், தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB) தற்பொழுது மாநிலத்தின் மிக முக்கிய மாவட்டங்களுக்கான அவசர மின் பராமரிப்புப் பணிகளை கையில் எடுத்துள்ளது. நாளை (ஜூன் 10, புதன்கிழமை) காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை (சில பகுதிகளில் மதியம் 2:00, மதியம் 3:00 மற்றும் மாலை 5:00 மணி வரை) மின்சார வாரிய துணை மின் நிலையங்களில் மேற்கொள்ளப்படவுள்ள வருடாந்திர சோதனை, ஏபி சுவிட்ச் சீரமைப்பு, பிரேக்கர்கள் பழுதுபார்ப்பு மற்றும் மின் பாதைகளில் உள்ள மரக்கிளைகளை வெட்டும் பணிகள் காரணமாக, தமிழகத்தின் பல முக்கிய வட்டாரங்களில் நாளை மின் தடை செய்யபடுவதாக நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கோவை மற்றும் உடுமலைப்பேட்டை வட்டாரங்கள்

கோவை வட்டாரங்கள்: பெத்தாபுரம், தண்ணீர்பந்தல், கோட்டைப்பிரிவு, ஒன்னிபாளையம் ரோடு, அறிவொளி நகர், சின்னமத்தம்பாளையம், மத்தம்பாளையம், செல்வபுரம், சாந்திமேடு, பாரதி நகர், சாநாயக்கன்பாளையம் ரோடு மற்றும் கண்ணார்ப்பாளையம் ரோடு. கொட்டமங்கலம் துணை மின் நிலையம்: கொட்டமங்கலம், பொன்னேரி, வெள்ளியம்பாளையம், ஐயம்பாளையம், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கம்பட்டி, சுங்காரமடக்கு மற்றும் குடிமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகள். மில் கோவில்பாளையம் & தேவனாம்பாளையம் மின்பாதைகள்: செங்குட்டுப்பாளையம், என்.ஜி.புதூர், பெரும்பதி, முள்ளுப்பாடி, வடக்கிபாளையம், வகுந்தாம்பாளையம், தேவனாம்பாளையம், செட்டிபுதூர் பகுதி, காப்பலங்கரை பகுதி, எம்மேகவுண்டம்பாளையம், சேரிபாளையம் மற்றும் ஆண்டிபாளையம்.

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

புதுக்கோட்டை, தஞ்சை மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள்:

புதுக்கோட்டை வட்டாரத் துணை மின் நிலையங்கள் (காலை 9:00 முதல் மாலை 4:00 வரை): அரிமளம் முழுப் பகுதி, ஆவடையாரினிலை (அலியாநிலை) முழுப் பகுதி, தல்லாம்பட்டி (வடகட்டுப்பட்டி) முழுப் பகுதி, அறந்தாங்கி டவுன் பகுதி மற்றும் மரமடக்கி முழுப் பகுதி. தஞ்சை பட்டுக்கோட்டை மற்றும் பூண்டி (காலை 9:00 முதல் மதியம் 3:00 வரை): பட்டுக்கோட்டை டவுன் பகுதிகள், பூண்டி துணை மின் நிலையப் பகுதிகள் மற்றும் ஐயம்பேட்டை 110KV துணை மின் நிலையப் பகுதிகள். பெரம்பலூர் 230 KV துணை மின் நிலையம் (காலை 9:00 முதல் மதியம் 2:00 வரை): அரணாரை, ரூரல் பகுதிகள், எளம்பலூர், மின் நகர் மற்றும் பாலக்கரை.

Advertisement

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

திண்டுக்கல், தேனி மற்றும் தருமபுரி வட்டாரங்கள்

திண்டுக்கல்வட்டாரங்கள்: அய்யலூர் மற்றும் நிலக்கோட்டை (காலை 9:00 முதல் மதியம் 2:00 வரை): அய்யலூர், குரும்பபட்டி, வளவிசெட்டிபட்டி, வடுகபட்டி, சிலுக்குவார்பட்டி, கெத்தையிரும்பு, காமாட்சிபுரம், ரெங்கமநாயக்கன்பட்டி மற்றும் செக்கப்பட்டி. மேலும் விருவீடு துணை மின் நிலைய சுற்றுவட்டாரப் பகுதிகள் மற்றும் வேதசந்தூர் நல்லமனார்கோட்டை HT SC DSRM பகுதிகள். தேனி வீரபாண்டி துணை மின் நிலையம் (காலை 10:00 முதல் மாலை 4:00 வரை): டொம்புச்சேரி, வீரபாண்டி, வயல்பட்டி மற்றும் பி.சி.பட்டி சுற்றுவட்டாரபகுதிகள். தருமபுரி சோகத்தூர் துணை மின் நிலையம் (காலை 9:00 முதல் மாலை 5:00 வரை): சோகத்தூர், குமாரசாமிப்பேட்டை, ரெட்டிஹள்ளி, பிடமனேரி, மாந்தோப்பு, வி.ஜெட்டிஹள்ளி, அதகபாடி, நியூ காலனி, இண்டூர், சோம்பட்டி, நேதாஜி பைபாஸ் ரோடு மற்றும் நெசவாளர் காலனி.

Advertisement

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

திருவண்ணாமலை மற்றும் செய்யாறு மங்கள் சிப்காட் பகுதிகள்

திருவண்ணாமலை வட்டாரங்கள்: (காலை 9:00 முதல் மாலை 4:00 வரை): தாச்சம்பட்டு, நாச்சியானந்தல், தேவனூர், காண்டியங்குப்பம், அப்புப்பட்டு, காந்திபுரம், தலையாம்பள்ளம், ஆதமங்கலம், சிறுவள்ளூர், வீரலூர், சோழவரம், கங்காவாரம், மேல்சோழங்குப்பம், கிடம்பாளையம் மற்றும் பள்ளக்கொல்லை. மங்கள் சிப்காட் துணை மின் நிலையம் (காலை 9:00 முதல் மதியம் 2:00 வரை): மங்கள் சிப்காட் வளாகப் பகுதிகள், அஸ்லே ஆல்டீம்ஸ், மாமண்டூர், சோழவரம், மாத்தூர், சுருட்டல் I & II, சிப்காட் I & II மற்றும் குன்னவாக்கம்.

Advertisement