Loading...
தமிழகத்தில் நாளை (ஜூலை 27) மின் தடை ஏற்படும் இடங்கள்! உடனே செக் பண்ணுங்க
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

தமிழகத்தில் நாளை (ஜூலை 27) மின் தடை ஏற்படும் இடங்கள்! உடனே செக் பண்ணுங்க

எழுதியவர் Vasuki
Jul 26, 2026
12:04 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை திங்கட்கிழமை (ஜூலை 27) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

சென்னை மாவட்டம்: பெரும்பாக்கம், விவேகானந்தா நகர், எழில் நகர் (TNUHDB குடியிருப்புப் பகுதிகள்), பெரியபாளையத்தம்மன் கோவில் தெரு, நற்குணம் அவென்யூ, ஸ்ரீ சாய் கார்டன், நூக்கம்பாளையம் முதன்மைச் சாலை, இந்திரா நகர், காமராஜ் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, ரோஸ் கார்டன், மேற்கு தாம்பரம், இரும்புலியூர் சர்வீஸ் ரோடு, இன்விகான் ஃபிளாட்ஸ், டி.டி.கே நகர், ஜெருசலேம் நகர், சர்ச் ரோடு, ரத்னா குமார் அவென்யூ, மருதம் ஃபிளாட்ஸ், ஏ.எஸ். ராஜன் நகர் மற்றும் ஜி.கே. மூப்பனார் அவென்யூ.

கோயம்புத்தூர் மாவட்டம்: நல்லாட்டிபாளையம், மேட்டுபாவி, பானாபட்டியின் ஒரு பகுதி மற்றும் கொத்தவாடி.

திண்டுக்கல் மாவட்டம்: செங்குறிச்சி, ராஜகாபட்டி, திருமலைக்கேணி, கம்பிலியம்பட்டி, செந்தூரை, கொசுவகுறிச்சி, பிள்ளையார்நத்தம் மற்றும் குப்பிலியம்பட்டி.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

திருப்பூர் மாவட்டம்: பூலவாடி, பொம்மநாயக்கன்பட்டி, பெரியபட்டி, குப்பம்பாளையம், அம்மாபட்டி, தொட்டியந்துரை, மானூர்பாளையம், பெரியகுமாரபாளையம், முண்டுவலம்பட்டி, வடுகபாளையம், பொட்டிகம்பாளையம், ஆத்துக்கிணத்துப்பட்டி, சுங்கரமடகு மற்றும் முத்துசாமிபுரம்.

பெரம்பலூர் மாவட்டம்: கீழப்பெரம்பலூர், வயலப்பாடி, அகரம், சிகூர், தேனூர், காடூர், நம்மங்குணம், கோவில்பாளையம் மற்றும் புதுவேட்டைக்குடி ஆகிய கிராமங்களில் மின்சார விநியோகம் தடைபடும்.

ADVERTISEMENT