
கரூர் காளியம்மன் கோயிலுக்கு சீல் வைத்த அதிகாரிகள் - அதிரடி நடவடிக்கை
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு, கரூர் மாவட்டத்தில் குளித்தலை என்னும் பகுதியில் வீரணம்பட்டி காளி கோயிலானது அமைந்துள்ளது.
இக்கோயிலில் தற்போது திருவிழா நடந்து வருவதாக தெரிகிறது.
இந்நிலையில் இந்த கோயிலுக்குள் பட்டியலினத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார்.
ஆனால் அவரை உள்ளே செல்லவிடாமல் தடுத்து நிறுத்தியுள்ளார்கள்.
இதுகுறித்து சமாதானமாக செல்ல பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
ஆனால் அதில் தீர்வு எட்டப்படாத காரணத்தினால் கோட்டாட்சியர் தலைமையில் இந்த கோயிலுக்கு சீல் வைத்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையினை எடுத்துள்ளனர்.
இதேபோல் சமீபத்தில் விழுப்புரத்தில் திரவுபதியம்மன் கோயிலிலும் பட்டியலினத்தை சேர்ந்த கதிரவன் என்பவர் உள்ளே செல்ல அனுமதிக்காததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுக்குறித்த வழக்கு பதிவுசெய்யப்பட்டு விசாரணை நடந்துவந்த நிலையில், நேற்று(ஜூன்.,7)அதிகாரிகள் கோயிலினை பூட்டி சீல் வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#JUSTIN | கரூர் மாவட்டத்தில் பட்டியலின இளைஞரை உள்ளே நுழையவிடாமல் தடுப்பு; கோயிலுக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை#SunNews | #Karur | #TempleIssue | #Casteism pic.twitter.com/9puEc3qymC
— Sun News (@sunnewstamil) June 8, 2023