அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு எதிரான மனு: இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம்
செய்தி முன்னோட்டம்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21ஆம் தேதி அமலாக்க இயக்குனரகத்தால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை, இரண்டு வாரங்களுக்குப் பிறகு விசாரிப்பதாக கூறி, ஏப்ரல் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.
முன்னதாக, கைதிற்கு எதிரான AAPயின் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம், ஏப்ரல் 9 ஆம் தேதி தள்ளுபடி செய்ததை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தை அணுகியிருந்தது கெஜ்ரிவால் தரப்பு.
இதற்கிடையில், தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வரின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 23ம் தேதி வரை நீட்டித்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிமன்றம், ஏப்ரல் 24ஆம் தேதிக்குள் விசாரணை நிறுவனத்திடம் இருந்து பதில் வேண்டும் என்றும் கூறியுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
அரவிந்த் கெஜ்ரிவால் மனு தள்ளுபடி
#BREAKING || கெஜ்ரிவால் மனு - அமலாக்கத்துறைக்கு உத்தரவு
— Thanthi TV (@ThanthiTV) April 15, 2024
அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு
மனுவுக்கு பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு விசாரணை ஏப்ரல் இறுதி வாரத்துக்கு தள்ளிவைப்பு#BreakingNews… pic.twitter.com/MajCQKcJ5J