சதுரகிரி மலையில் உள்ள சிறப்புமிக்க மருத்துவ குணமிக்க நாவல் நீரூற்று
விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த சதுரகிரி மலை புகழ்பெற்ற ஆன்மீக மலையாகும். இந்த மலையில் அமைந்துள்ள சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள நாவல் மரத்தடியில் இயற்கையாக உருவாகும் நீரூற்றை நம்மால் காண முடியும். நாவல் மரத்தின் அடியில் இருந்து வருவதால் இதனை நாவல் நீரூற்று என்று கூறுகிறார்கள். இந்த மலையில் பல நோய்களை தீர்க்கும் அபூர்வ மூலிகைகள் நிறைந்துள்ள நிலையில், இந்த நாவல் நீரூற்று நீருக்கு சர்க்கரை நோயை குணப்படுத்தும் மருத்துவ தன்மை உள்ளது என்று நம்பப்படுகிறது. சர்வேதேச அளவில் இந்த நோய்கான மருந்துகள் விற்பனைக்கு உள்ள நிலையில் இந்த ஊற்று நீர் எவ்வாறு குணப்படுத்தக்கூடும் என்று பலருக்கும் ஒருபக்கம் கேள்விகளும் எழுகிறது என்பது குறிப்பிடவேண்டியவை.
சதுரகிரி மலையேறி சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் பாட்டில்களில் எடுத்து செல்கிறார்கள்
சித்த மருத்துவத்தில் பொதுவாக சர்க்கரை நோய்க்கு நாவல் பழங்கள் பயன்படுத்தப்படும். அந்த வகையில் இந்த நீரானது நாவல் மரத்தின் அடியில் உருவாகி, மரத்தின் வேர்கள், இலைகள் பட்டு வருவதால் இந்த மருத்துவ குணத்தினை பெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் சதுரகிரி மலையேறி சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் இந்த நீரினை தொடர்ந்து குடித்தால் சர்க்கரை நோயில் இருந்து நிரந்தரமாக குணமடையலாம் என்பதால் பாட்டில்களில் இந்த நீரினை எடுத்து செல்கிறார்கள். பார்ப்பதற்கு கண்ணாடி போல் தெளிவாக காணப்படும் இந்த நீரினை கையில் அள்ளி குடித்தால் அவ்வளவு இனிப்பான சுவையில் இருக்கிறது என்பது இதன் கூடுதல் சிறப்பாகும்.