Page Loader
தேர்தல் 2024: பாஜகவுடன் கைகோர்க்கிறார் சரத்குமார்
பாஜகவுடன் கைகோர்க்கிறார் சரத்குமார்

தேர்தல் 2024: பாஜகவுடன் கைகோர்க்கிறார் சரத்குமார்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 06, 2024
05:43 pm

செய்தி முன்னோட்டம்

வரவிருக்கும் மக்களவைப் பொதுத் தேர்தலுக்கான பணிகளை கட்சிகள் செயல்படுத்தி வருகின்றன. ஒரு சில கட்சிகள் தங்கள் கூட்டணிகளை பற்றி அறிவித்துள்ளது. வேறு சில கட்சிகளோ இன்னும் பேச்சுவார்த்தையில் உள்ளது. இந்த நிலையில், பாஜகவுடன் கூட்டணி சேரப்போவதாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். மற்ற விவரங்களை இன்னும் ஒரு வார காலத்திற்குள் அறிவிப்பதாக சரத்குமார் தெரிவித்துள்ளார். இதுவரை பாஜகவுடன் கூட்டணி வைப்பதாக அதிகாரபூர்வமாக தமிழ் மாநில காங்கிரஸ், சமத்துவ மக்கள் கட்சி போன்றவை அறிவித்துள்ளது. எனினும், தேர்தல் வேட்பாளர்கள் குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் அறிவிப்பு வெளியாகவில்லை. மறுபுறம், பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறிய அதிமுக இன்னமும் எந்த கட்சியோடு கூட்டணி அமைக்கவிருக்கிறது என தெரிவிக்கவில்லை.

embed

பாஜகவுடன் இணைந்த சரத்குமார்

பாஜக - சமக கூட்டணி வரும் மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கைகோர்த்தார் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் "மோடியை மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்க பாஜகவுடன் இணைந்து செயல்பட முடிவு" - சரத்குமார்#bjp | #pmmodi | #Sarathkumar | #ThanthiTV pic.twitter.com/aDHTB0o8Gz— Thanthi TV (@ThanthiTV) March 6, 2024