சமயபுர மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம் - ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்
செய்தி முன்னோட்டம்
உலகளவில் பிரசித்திப்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டத்திருவிழா இன்று(ஏப்ரல்.,18)நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து வருவது வழக்கம்.
குறிப்பாக சித்திரை மாதம் மிகவும் விசேஷமான மாதமாக கருதி இங்குள்ள அம்மனுக்கு வழிபாடுகள் நடக்கும்.
அதன்படி இந்த ஆண்டிற்கான தேர்த்திருவிழா மார்ச் 12ம்தேதி பூச்சொரிதல் வைபவத்தோடு துவங்கப்பட்டது.
பின்னர் கடந்த 7ம்தேதி மூகூர்த்தக்கால் நடும் நிகழ்வு அரங்கேறியது.
இந்த தேரோட்டவிழாவினை முன்னிட்டு தினமும் காலையில் அம்மன் பல்லக்கில் எழுந்தருளி கோயிலை வலம் வந்து பக்தர்களுக்கு தரிசனமளிப்பார்.
இரவில் சிம்மம்,அன்னம்,வெள்ளிக்குதிரை போன்ற வாகனங்களில் திருவீதி உலா வருவார்.
இதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை 10,31மணிக்கு மேல் மிதுன லக்னத்தில் கோலாகலமாக நடந்தது.
தேர்
தேரோட்ட நிகழ்வு பிரச்சனையின்றி நடக்க காவலர்கள் விரதம்
தமிழ்நாடு மட்டுமின்றி மற்ற மாநிலங்களில் இருந்தும் பல்லாயிர கணக்கான பக்தர்கள் ஒன்று கூடி தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
இந்த தேர் திருவிழாவிற்காக பெரும் பக்தர்கள் கூட்டம் வரும் என்று எதிர்பார்த்த நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகளை காவல்துறை மிக அருமையாக மேற்கொள்ளப்பட்டிருந்தது.
பக்தர்களின் பாதுகாப்பிற்காகவும், குற்ற சம்பவங்களை தடுக்கவும், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் தலைமையில் 3ஏடிஎஸ்பி, 18டிஎஸ்பி, 25காவல் ஆய்வாளர்கள், 60 காவல்உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 1,267 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இதற்கிடையே இந்த தேர் திருவிழா எவ்வித பிரச்சனையும் ஏற்படாமல் அமைதியான முறையில் நடைபெற வேண்டும் என்று சமயபுரம் காவல் ஆய்வாளர் கருணாகரன், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் சிலர் அம்மனுக்கு மாலையணிந்து விரதம் இருந்தது குறிப்பிடத்தக்கது.