சேலம் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் கைது - காவல்துறை அதிரடி
சேலம் பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகரான இளங்கோவன், பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது புகார் அளித்துள்ளார். அப்புகாரில், போலி ஆவணங்கள் தயாரித்து தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறை தற்போது ஜெகநாதனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. அரசு செலவுகளில் அலுவலர்களை பயன்படுத்தியதாகவும், தனியே நிறுவனங்கள் துவங்கியதன் காரணமாகவும் இவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது. இதனிடையே, துணைவேந்தரின் இச்செயல்கள் பல்கலைக்கழகத்தினை கூறுப்போட்டு விற்பதற்கு சமானம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டியுள்ளார். மேலும் கல்வி வளர்ச்சிக்காக எதுவும் செய்யாத துணைவேந்தர் ஜெகநாதன் ஊழலில் ஈடுபட்டுள்ளார் என்றும் இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.