Page Loader
சத்குரு ஜக்கி வாசுதேவிற்கு மூளையில் ரத்தக்கசிவு; டெல்லி மருத்துவமனையில் அவசர அறுவைசிகிச்சை
ஜக்கி வாசுதேவ் கடந்த சில நாட்களாக கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்தார்

சத்குரு ஜக்கி வாசுதேவிற்கு மூளையில் ரத்தக்கசிவு; டெல்லி மருத்துவமனையில் அவசர அறுவைசிகிச்சை

எழுதியவர் Venkatalakshmi V
Mar 20, 2024
06:41 pm

செய்தி முன்னோட்டம்

பிரபல ஆன்மீக மையமான ஈஷாவின் நிறுவனரான சத்குரு ஜக்கி வாசுதேவிற்கு டெல்லியிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையான அப்பல்லோவில், மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 17ஆம் தேதி, மூளையில் வீக்கம் மற்றும் இரத்தப்போக்கு ஏற்பட்டதை தொடர்ந்து அவர் டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி வெளியான ஊடக செய்திகளின்படி, ஜக்கி வாசுதேவ் கடந்த சில நாட்களாக கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். அதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, எம்ஆர்ஐ ஸ்கேன் மற்றும் சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது. அப்போது ஜக்கி வாசுதேவின் மூளையில் இரத்தப்போக்கும், ஒரு பகுதியில் வீக்கமும் இருப்பது கண்டறியப்பட்டது. அதனால், டாக்டர்கள் குழு அவருக்கு அவசர அறுவை சிகிச்சை செய்தனர். தற்போது அவர் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

ட்விட்டர் அஞ்சல்

சத்குருவின் மருத்துவர் தந்த அறிக்கை