சபரிமலை கூட்ட நெரிசல் விவகாரம் - கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
கேரளா மாநிலம் சபரிமலை கோயில் நடை மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக இந்தாண்டு நவம்பர் 16ம் தேதி திறக்கப்பட்டது. கேரளா, தமிழ்நாடு மாவட்டங்களில் இருந்து மட்டுமில்லாமல் இந்த கோயிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருவது வழக்கம். அதன்படி, ஆண்டுதோறும் டிசம்பர் 15ம் தேதிக்கு பிறகு கூட்டம் அதிகரிக்கும் நிலையில், இந்தாண்டு நடை திறக்கப்பட்ட நாளிலிருந்தே கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஏற்கனவே 90 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ள நிலையில், அதனை தவிர்த்து நேரடி முன்பதிவிற்கு 10 ஆயிரம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பக்தர்களுக்கான உணவு வகைகள் மற்றும் குடிநீர் கிடைப்பதினை உறுதி செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தல்
இதன் மூலம் வழக்கத்தினை விட எண்ணிக்கையில் 20 ஆயிரம் பக்தர்கள் கூடுதலாக வருவார்கள் என்று தெரிகிறது. இந்நிலையில் சபரிமலை கூட்ட நெரிசலை குறைக்க மாநில அரசு கட்டுப்பாடுகளை விதிக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, ஐயப்பனை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கோயிலுக்கு செல்லும் வழியில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும். பக்தர்களின் குறைகளை சரி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. பக்தர்களுக்கான உணவு வகைகள் மற்றும் குடிநீர் கிடைப்பதினை உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, இந்த விவகாரத்தில் மாவட்டம் நிர்வாகம் ஒன்றிணைந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், தேவையெனில் காவல்துறை டிஜிபி இதில் தலையிடலாம் என்றும் உயர்நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.