வீடியோ: பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரை வரவேற்றார் அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்
கோவாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(SCO) மாநாட்டிற்கு வந்திருந்த பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரியை வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று(மே 5) வரவேற்றார். படங்களுக்கு போஸ் கொடுப்பதற்கு முன், இருவரும் கைகூப்பி வணக்கம் தெரிவித்துக் கொண்டனர். சுமார் 12 வருட இடைவெளிக்குப் பிறகு இந்தியா வரும் முதல் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ ஆவார். 2011ஆம் ஆண்டு அப்போதைய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹினா ரப்பானி கர் இந்தியா வந்திருந்தார். ஜம்மு மற்றும் காஷ்மீரில் எல்லை தாண்டிய பயங்கரவாதம் செயல்பட்டு வருவது உட்பட, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளில் தொடர்ந்து விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், SCO வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கவுன்சில்(CFM) கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பூட்டோ இந்தியா வந்துள்ளார்.