Loading...
சைதாப்பேட்டை மக்களை சபித்த RS பாரதி: திமுக தலைவர்களின் பேச்சால் குவியும் கண்டனம்
சென்னையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி

சைதாப்பேட்டை மக்களை சபித்த RS பாரதி: திமுக தலைவர்களின் பேச்சால் குவியும் கண்டனம்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 14, 2026
05:15 pm

செய்தி முன்னோட்டம்

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக படுதோல்வியை சந்தித்த நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவர்களும் ஆதரவாளர்களும் பொதுவெளியில் வாக்காளர்களை சாபம் விடுக்கும் வகையில் பேசி வருவது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சைதாப்பேட்டை தொகுதியில் மா.சுப்ரமணியன் போட்டியிட்டு தோல்வியடைந்ததை சுட்டிக்காட்டி,"சைதாப்பேட்டை தொகுதியில் மா.சுப்ரமணியன் செய்த நலத்திட்ட உதவிகளைப் போல யாரும் செய்ததில்லை". "கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது கூட அந்தப் பகுதியில் பெரிய மருத்துவமனையை கொண்டு வர முடியவில்லை. ஆனால் மா.சுப்ரமணியன் கொண்டுவந்த மருத்துவமனைக்கு வந்து சென்ற நோயாளிகளும், அவர்களின் உறவினர்களும் வாக்களித்திருந்தாலே அவர் வெற்றி பெற்றிருப்பார். அவனுங்களுக்கு எல்லாம் நல்ல சாவே வராது" என்று மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்து பேசியுள்ளார்.

தொடரும் சாடல்கள்

கொளத்தூர் முதல் சைதாப்பேட்டை வரை: தொடரும் சாடல்கள்

தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுக தலைவர்கள் வாக்காளர்களை நோக்கிச் சீறுவது இது முதல் முறையல்ல.

கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்ததைக் தாங்க முடியாமல், அத்தொகுதி மக்களை "கேடுகெட்ட மக்கள்" என விமர்சித்தார் அனிதா ராதாகிருஷ்ணன்.

கொளத்தூர் தொகுதி மக்களுக்கு மனசாட்சி இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார் நடிகர் சத்யராஜ்.

இதுமட்டுமில்லாமல், தமிழகத்தில் சிறு மின்வெட்டு அல்லது குற்றச்சம்பவங்கள் நடந்தால் கூட, "தவெக-விற்கு ஓட்டுப் போட்டீர்கள் அல்லவா? அனுபவியுங்கள்" எனத் திமுக ஆதரவாளர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

கண்டனங்கள்

மக்களிடையே குவியும் கண்டனங்கள்

"கடந்த தேர்தலில் இதே மக்கள்தான் திமுகவை ஆட்சிப் பீடத்தில் அமர வைத்தனர். தற்போது ஜனநாயக முறையில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்க முடியாமல், வாக்களித்த மக்களையே 'நல்ல சாவே வராது' எனச் சபிப்பது அரசியல் நாகரிகமல்ல" எனப் பல்வேறு தரப்பினரும் தங்களின் கடும் கண்டனப் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT