Page Loader
தமிழக அரசு விருந்தினர் மாளிகையில் ரூ.32.68 லட்ச லஞ்ச பணம் பறிமுதல்
தமிழக அரசு விருந்தினர் மாளிகையில் ரூ.32.68 லட்ச லஞ்ச பணம் பறிமுதல்

தமிழக அரசு விருந்தினர் மாளிகையில் ரூ.32.68 லட்ச லஞ்ச பணம் பறிமுதல்

எழுதியவர் Nivetha P
Apr 07, 2023
07:44 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு மாநிலம், ராமநாதபுர மாவட்ட ஆட்சியர் கட்டிட வளாகத்தில் பொதுப்பணித்துறை கட்டுமானம் மற்றும் கட்டுமான பிரிவு உள்ளது. இந்த அலுவலகத்தில் செயற்பொறியாளராக பணிபுரியும் கண்ணன் என்பவர் அந்த வளாகத்தில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கிறது. இதனையடுத்து இங்கு லஞ்ச பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில், நேற்று(ஏப்ரல்.,6) இரவு ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் டி.எஸ்.பி.ராமசந்திரன் தலைமையில் ஆட்சியர் அலுவலக ஆய்வுக்குழு அலுவலர்களுடன் அரசு விருந்தினர் மாளிகையில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

தொடர் விசாரணை

பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஜீப்'பில் இருந்தும் பணம் பறிமுதல்

இந்த சோதனையில் செயற்பொறியாளராக பணிபுரியும் கண்ணன் தங்கியிருந்த அறை மற்றும் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஜீப் ஆகியவற்றில் இருந்து கணக்கில் வராத பணம் கட்டுக்கட்டாக சிக்கியது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. அதன்படி ரூ.32 லட்சத்து 68 ஆயிரத்தி 570 ரூபாய் பணம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து செயற்பொறியாளர் கண்ணன், தொழில்நுட்ப வரைவாளர் குமரேசன், ஜீப் ட்ரைவர் முனுசாமி ஆகியோர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தற்போது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.