
பொங்கல் பரிசு பொருட்களுடன் ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
ஆண்டுதோறும் தமிழக அரசின் சார்பில், குடும்ப அட்டைதாரர்களுக்கு, பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டும், தமிழகத்தில் உள்ள 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.
கூடுதலாக, இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசித்து வரும் குடும்பங்களுக்கும் இந்தாண்டு முதல் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி இருந்தது.
இந்த பரிசு தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
எனினும் ரொக்கம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்த சூழலில், பொங்கல் பரிசுடன் ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
card 2
யாருக்கு பொங்கல் பரிசு கிடைக்கும்?
எனினும் இந்த தொகை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கிடையாது. அதாவது, அரிசி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பரிசுத்தொகைக்கு தகுதியானவர்கள்.
மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், சர்க்கரை அட்டைத்தாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் ஆகியோருக்கு தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகை ரூ.1000 வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேநேரத்தில் பெண்களுக்கு வழிபட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமை தொகை இந்த மாதம் மட்டும், ஜனவரி 10 -ஆம் தேதியே வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
கலைஞர் மகளிர் உரிமை தொகை
#BREAKING | கலைஞர் உரிமைத்திட்டத்துக்கு மேல் முறையீடு செய்த 2 லட்சம் பேருக்கு இம்மாதம் தொகை வரவு வைக்கப்படும்!#SunNews | #TNGovt | #KalaignarMagalirUrimaiThittam | @mkstalin pic.twitter.com/avlikS3XyW
— Sun News (@sunnewstamil) January 5, 2024
ட்விட்டர் அஞ்சல்
பொங்கல் பரிசு ரொக்கம் அறிவிப்பு
#BREAKING | குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ₹1000 வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!#SunNews | #PongalParisu | #TNGovernment | #Pongal2024 | @mkstalin pic.twitter.com/RXPcunI3w1
— Sun News (@sunnewstamil) January 5, 2024