
பிரபலமான அவினாசி லிங்கேஸ்வரர் கோயிலில் திருட்டு முயற்சி
செய்தி முன்னோட்டம்
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் மிகப்பிரசித்தி பெற்ற கோயில் லிங்கேஸ்வரர் கோயில் ஆகும்.
இந்த கோயிலுக்கு உள்ளூர்மக்கள் மட்டுமல்லாமல் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம்.
இந்நிலையில் நேற்று(மே.,22)வழக்கம்போல் அர்ச்சகர்கள் பூஜைகளை முடித்துவிட்டு கோயிலினை பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.
பின்னர் இன்று(மே.,23)காலை கோயிலினை திறந்து பார்த்தப்பொழுது கோயிலில் திருட்டு நடந்ததற்கான அறிகுறிகளை கண்டு அதிர்ச்சியடைந்த அர்ச்சகர்கள் உடனே அவினாசி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவயிடத்திற்கு வந்த காவல்துறை கோயிலினை சுற்றி ஆய்வுச்செய்தது.
தொடர்ந்து, கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள் யார் என்று கண்டறிய சிசிடிவி காட்சிகளை ஆய்வுச்செய்தனர்.
அதில் வாலிபர் ஒருவர் கலசத்தினை ஒவ்வொன்றாக உடைப்பதும், பின்னர் கருவறைக்குள் செல்லும் காட்சியும் பதிவாகியிருந்தது.
அவரின் உருவத்தினை வைத்து காவல்துறையினர் அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.
திருட்டு
திருடுபோன பொருட்கள் குறித்த விவரங்கள் தெளிவாக இல்லை
மேலும் கோயிலில் காவல்துறை நடத்திய ஆய்வின் போது ராஜகோபுரத்தில் ஒரு வாலிபர் மறைந்திருந்தது தெரியவந்தது.
அவர் ராஜகோபுரத்தில் திருடுவதற்காக எறியுள்ளார், இரவு நேரம் என்பதால் கீழே இறங்க முடியாமல் அங்கேயே பதுங்கி இருந்துள்ளார்.
இவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில், உடன் வந்தோரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அவினாசி லிங்கேஸ்வரர் உள்ள பிரதான கருவறையில் லிங்கத்தின் மேல் உள்ள அபிஷேக திரவியம் படும் வகையில் உள்ள தாராபாத்திரம் திருட முயற்சிக்கப்பட்டுள்ளது.
அதனை கழற்ற முடியாத காரணத்தால், பிரதான கருவறையினை சுற்றியிருக்கும் நாயன்மார்களின் வஸ்திரங்கள், சிறு கலசங்கள், சுப்ரமணியர் சன்னதியில் இருந்த வேல், சேவல் கொடி ஆகியன திருடப்பட்டுள்ளது.
விசாரணை முடிந்த பின்னரே திருடுபோன பொருட்கள் குறித்த முழு விவரங்கள் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.