
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் போட்டி இல்லாமல் இல்லை: வெளியுறவுத்துறை அமைச்சர்
செய்தி முன்னோட்டம்
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இரண்டு நாள் பயணமாக ஏப்ரல் 27-ஏப்ரல் 29 வரை டொமினிகன் குடியரசு நாட்டிற்கு சென்றிருந்தார்.
அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகமான MIREXஇல் உரையாற்றிய அவர் கூறியதாவது:
இந்தியப் பெருங்கடல் மற்றும் அதன் தீவுகளுக்கான ஒரு விரிவான இலக்கை 2015ஆம் ஆண்டு முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடி வெளிப்படுத்தினார். இதுவே பின்னர் இந்தோ-பசிபிக் விஷனை உருவாக்க அடிக்கல்லாக மாறியது.
இந்த விஷன் மூலம், இந்தியாவை மத்திய ஆசியாவுடன் மிகவும் திறம்பட இணைக்கும் ஒரு உத்தியை நாங்கள் பின்பற்றி வருகிறோம்.
கடந்த பத்து ஆண்டுகளாக, நாங்கள் இதற்கு தொடர்ந்து அளித்த வந்த முன்னுரிமையை வைத்து இந்திய இராஜதந்திரத்தின் கருத்தியலை உங்களால் புரிந்துகொள்ள முடியும்.
details
சீனா எல்லை பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்களை மீறியதன் விளைவு தான் அது: இந்தியா
ஆனால் அதற்கும் மேல், அனைத்து முக்கிய அதிகார மையங்களுடனும் இணைந்திருக்கும் அணுகுமுறையை நாங்கள் நடைமுறைப்படுத்தி உள்ளோம்.
பல்வேறு நாடுகளுடன் ஒரே மாதிரியான உறவுகளை பின்பற்றுவது பல துருவமுனைப்பின் யதார்த்தத்தை பிரதிபலிக்கிறது.
அமெரிக்காவோ, ஐரோப்பாவோ, ரஷ்யாவோ அல்லது ஜப்பானோ எதுவாக இருந்தாலும், இந்த உறவுகள் அனைத்தும் தனித்தன்மையைத் தேடாமல் முன்னேறுவதை உறுதிசெய்ய நாங்கள் முயற்சிக்கிறோம்.
எல்லை தகராறு மற்றும் தற்போது எங்களுடைய உறவுகளின் அசாதாரண நிலை காரணமாக, சீனா சற்று வித்தியாசமான வகைக்குள் வருகிறது.
அவர்கள்(சீனா) எல்லை பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்களை மீறியதன் விளைவு தான் அது.
ஒரே நேரத்தில் சீனாவும் இந்தியாவும் வளர்ச்சியடைந்து வருவதால், அந்நாடுகளுக்கு இடையே போட்டி இல்லாமல் இல்லை.
இந்தியாவின் மிக முக்கியமான முன்னுரிமைகள் அதன் அண்டை நாடுகளில் உள்ளன.