அரிசி ஏற்றுமதி தடை எதிரொலி: தமிழ்நாட்டில் அதிகரித்த விலை
வடமாநிலங்களில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. உத்தரகண்ட், டெல்லி போன்ற மாநிலங்களில் கொட்டித்தீர்த்த பிறகு, தற்போது குஜராத் மாநிலத்தில் வரலாறு காணாத மழை பெய்து வருவதாக செய்திகள் கூறுகின்றன. இந்த அதீத மழை காரணமாகவும், மற்ற மாநிலங்களில் மழை பொய்த்த காரணத்தினாலும், விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. அதன் விளைவாக அரிசி உற்பத்தி பாதிப்படைந்துள்ளது. உள்நாட்டில் போதிய கையிருப்பு இல்லாத காரணத்தால், சென்ற வாரம், பாஸ்மதி அரிசி அல்லாத மற்ற வெள்ளை அரிசிகளின் ஏற்றுமதிக்கு தடை விதித்தது மத்திய அரசு. இந்த தொடர்ச்சியாக, தற்போது சென்னையில் அரிசி விலை உயர்ந்துள்ளது. ஒரு மூட்டை அரிசி ரூ 450க்கு விற்கப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த திடீர் விலையேற்றத்தால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.