Page Loader
சென்னை அரசு மருத்துவமனையில், குழந்தை கை அகற்றப்பட்ட விவகாரம்; மருத்துவமனை விளக்கம்
மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அலட்சியத்தால் தான் பச்சிளம் குழந்தையின் கை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது என்று புகார்கள் எழுந்ததை அடுத்து, தற்போது மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது

சென்னை அரசு மருத்துவமனையில், குழந்தை கை அகற்றப்பட்ட விவகாரம்; மருத்துவமனை விளக்கம்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 03, 2023
08:28 am

செய்தி முன்னோட்டம்

நேற்று, சென்னை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஒன்றரை வயது குழந்தையின் வலது கை, செவிலியர்களின் கவனக்குறைவால் அழுகியதாகவும், அதன் தொடர்ச்சியாக அந்த குழந்தையின் கை அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டதாகவும் செய்தி வெளியானது. தமிழ்நாட்டில் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த செய்தியின் தொடர்ச்சியாக முறையான விசாரணை நடைபெறும் என அமைச்சர் மா.சுப்ரமணியம் அறிவித்தார். தற்போது, மருத்துவமனை சார்பில் விளக்கம் வெளியாகியுள்ளது. அதன்படி, ராமநாதபுரத்தை சேர்ந்த ஒன்றரை வயது குழந்தை முகமது மகீர், குறை பிரசவத்தில் 1.5 கிலோ எடையுடன் பிறந்தது அந்த குழந்தைக்கு தீவிர hydrocephalus எனும் மூளையில் நீர் கசியும் கோளாறு இருந்தது.

card 2

குழந்தையின் கை நீக்கப்பட்ட விவகாரம் 

தொடர்ந்து ராமநாதபுரத்திலிருந்து, மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது குழந்தை. குழந்தைக்கு, சென்னை அரசு மருத்துவமனையில், மூளையில் ஏற்படும் நீர் கசிவை உறிஞ்ச, VP shunt என்ற மருத்துவக்கருவி பொருத்தப்பட்டது. பொருத்தப்பட்ட VP shunt, வெளியே வந்துவிட்டதால், அதை அகற்றிவிட்டு மீண்டும் புதிதாக VP shunt பொருத்தப்பட்டது. அதற்காக நடைபெற்ற அறுவை சிகிச்சைக்குப்பின் குழந்தையின் வலது கையில் ரத்த உறைவு ஏற்பட்டதுள்ளதாக தெரிகிறது. அந்த உறைவை நீக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்ட போதும், ரத்த உறைவு வலது கை முழுவதும் பரவியதால், கையை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது என தற்போது மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.