LOADING...
ஊட்டியின் பிரபலமான 52.4 ஏக்கர் ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல்

ஊட்டியின் பிரபலமான 52.4 ஏக்கர் ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 05, 2024
02:24 pm

செய்தி முன்னோட்டம்

ஊட்டி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள 100 ஆண்டுக்கு மேல் செயல்பட்டு வந்த ரேஸ் கோர்ஸிற்கு இன்று வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். பிரபலமான அடையாள சின்னமாக செயல்பட்டு வந்த இந்த குதிரை பந்தய மைதானம் குத்தகை பாக்கியை செலுத்த தவறியதால், நீதிமன்ற உத்தரவுப்படி சீல் வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குத்தகை நிலுவை தொகை,ரூ.822 கோடியாகும். குத்தகை காலம் 1978 உடன் முடிந்த நிலையில் அதன்பிறகு பயன்பாட்டிற்காக ஒப்பந்தமும் போடப்படவில்லை, குத்தகை தொகையும் செலுத்தாமல் மைதானம் இயங்கி வந்துள்ளது என கூறப்படுகிறது. இது பற்றி ஊட்டி கார்பரேஷன் அதிகாரிகள் பல முறை நோட்டீஸ் அளித்தும் ரேஸ் கிளப் நிர்வாகம் குத்தகை பாக்கியை செலுத்தாததை அடுத்து கடந்த 2006ல் வருவாய்த்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

ட்விட்டர் அஞ்சல்

ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல்!