Page Loader
புதுக்கோட்டையில் ஓய்வுபெற்ற உதவியாளர் - ஆட்சியரின் நெகிழ்ச்சி செயல் 
புதுக்கோட்டையில் ஓய்வுபெற்ற உதவியாளர் - ஆட்சியரின் நெகிழ்ச்சி செயல்

புதுக்கோட்டையில் ஓய்வுபெற்ற உதவியாளர் - ஆட்சியரின் நெகிழ்ச்சி செயல் 

எழுதியவர் Nivetha P
May 02, 2023
03:55 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு மாநிலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தவர் அன்பழகன். இவர் அந்த அலுவலகத்தில் 35 ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அன்பழகன் இன்று(மே.,2) தனது பதவி காலம் முடிந்து ஓய்வு பெறுகிறார். இதனையடுத்து அம்மாவட்ட ஆட்சியர் அந்த உதவியாளரை வழியனுப்பி வைத்த விதம் தற்போது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக கவிதா ராமு அவர்கள் அன்பழகனை காரில் தனது இருக்கையில் அமர வைத்து வழியனுப்பி வைத்துள்ளார். இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தினை நேரில் கண்டோர் கண்ணில் கண்ணீர் வராமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. இந்த அழகிய நிகழ்வு வீடியோவாக தற்போது இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post