Page Loader
அமெரிக்காவில் வசிக்கும் பெண்ணின் வீட்டில் விலை மதிப்பற்ற சிலைகள் மீட்பு! இது முதல் முறையல்ல!
3-வது முறையாக 14 சிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளது

அமெரிக்காவில் வசிக்கும் பெண்ணின் வீட்டில் விலை மதிப்பற்ற சிலைகள் மீட்பு! இது முதல் முறையல்ல!

எழுதியவர் Arul Jothe
May 16, 2023
01:24 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவில் வசிக்கும் பெண்ணின் சென்னை வீட்டில்14 சிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன, இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை ராஜாஅண்ணாமலைபுரம் பகுதியில் வசிக்கும் சோபா துரைராஜனின் கணவர் அமெரிக்காவில் வேலை செய்கிறார். இவரும் அமெரிக்காவில் உள்ளனர். கடந்த டிசம்பர் மாதம், பழங்கால சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. உடனே வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது 17 பழங்கால சிலைகள் கைப்பற்றப்பட்டது. மீண்டும் 2-வது முறையாக ஏப்ரல் 19-ந்தேதி அதே வீட்டில் 55 கற்சிலைகள் கைப்பற்றப்பட்டன. 3-வது முறையாக நேற்று முன்தினம் போலீசார் அடங்கிய தனிப்படையினர் சோதனை மேற்கொண்டனர். அதில், 14 உலோகச் சிலைகள், தஞ்சாவூர் ஓவியங்கள் மற்றும் மரச்சிற்பங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

Idols Scam

சென்னைக்கு வந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் ஆஜராக வேண்டும்

இந்த பழங்கால சிலைகளை, தீனதயாளன் என்ற பிரபல சிலைக்கடத்தல் குற்றவாளியிடம் வாங்கியதாக தெரியவந்துள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை விலை கொடுத்து சிலைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கியதாகவும், இதை வெளிநாடுகளுக்கு கடத்தி சென்று விற்பது நோக்கமல்ல என்றும் சோபா துரைராஜன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இருக்கும் அவர் சென்னைக்கு வந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் ஆஜராக வேண்டும், என்று அவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இவற்றை விற்பனை செய்த தீனதயாளன் தற்போது இறந்துவிட்டார். அதனால் இவை எந்த கோவில்களில் திருடப்பட்டவை என்பது குறித்த விவரங்கள் சேகரிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. சோபா துரைராஜன் சென்னை வந்த பிறகு விசாரணை நடத்தப்படும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.