ஆயிரக்கணக்கான தலித் பெண்களுக்கு வாழ்வாதாரம் வழங்கிய 'சிறுதானிய மனிதர்'
டெக்கான் டெவலப்மென்ட் சொசைட்டியின்(DDS) நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனரான 'தெலுங்கானாவின் சிறுதானிய மனிதர்' பெரியபட்னா வெங்கடசுப்பையா சதீஷ் உடல் நலக்குறைவால் 19 மார்ச் 2023அன்று காலமானார். பி.வி.சதீஷ் ஹைதராபாத்தில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 77 வயதில் உயிரிழந்தார். மறுநாள் காலை, தெலுங்கானாவின் ஜஹீராபாத் பகுதியில் உள்ள சங்கரெட்டி மாவட்டத்தின் (முன்னர் மேடக் மாவட்டத்தின் ஒரு பகுதி) பாஸ்தாபூர் கிராமத்தில் அவரது இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன. 1980களின் முற்பகுதியில், சதீஷ், இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து, தெலுங்கானாவின் கிராமப்புற பகுதியான ஜஹீராபாத்தில் DDSஐ நிறுவினார். அதன்மூலம், 75 கிராமங்களில் உள்ள தலித் மற்றும் ஆதிவாசி சமூகங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.
சோள பயிர்களை மீட்டெடுத்த அமைப்பு
இந்தப் பெண்களை 'சங்கங்களாக' ஒன்றிணைத்த, DDS அமைப்பானது, பசி, ஊட்டச்சத்து குறைபாடு, பல்லுயிர் பாதுகாப்பு, பாலின நீதி மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பை மேம்படுத்தும் பல்வேறு திட்டங்களை முன்மொழிந்தது சோள பயிர்களை மீட்டெடுப்பதையே இந்த திட்டங்கள் அடிப்படையாக கொண்டிருந்தன. அதிக லாபம் தரும் அரிசி, கோதுமை மற்றும் கரும்பை விட சோளம் மிகவும் ஆரோக்கியமானது. மேலும், இது தெலுங்கானாவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு தனியமாகும். சதீஷ், நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக சர்வதேச அளவில் புகழ்பெற்ற இந்த இலாப நோக்கற்ற அமைப்பிற்கு தலைமை தாங்கி வந்தார். காலப்போக்கில், இவர் நிலையான விவசாயம், பல்லுயிர் பெருக்கம் மற்றும் சிறுதானியத்தை ஊக்குவித்தல் போன்ற காரணங்களுக்காக MINI, SAGE, SANFEC போன்ற பல தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களை வழிநடத்தினார்.