
மிக கனமழைக்கு வாய்ப்பு; சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15 அல்லது 16ஆம் தேதி தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் நாளை முதல் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை படிப்படியாக அதிகரிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், அக்டோபர் 15 மற்றும் 16 ஆகிய இரண்டு நாட்களிலும் மிக கனமழை வெளுத்து வாங்கும் எனவும் கூறியுள்ளார்.
இதற்கிடையே, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு அக்டோபர் 16 வரை சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது.
இந்த நாட்களில் 20 சென்டிமீட்டருக்கும் மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
ரெட் அலெர்ட்
#வானிலைBREAKING | வரும் 16ம் தேதி 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!#SunNews | #ChennaiRains | #WeatherUpdate | #RedAlert pic.twitter.com/YuCBgYBVac
— Sun News (@sunnewstamil) October 13, 2024
ட்விட்டர் அஞ்சல்
சென்னையில் படிப்படியாக மழை அதிகரிக்கும்
#BREAKING | சென்னையில் நாளை முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும்#SunNews | #ChennaiRains | #TNRains pic.twitter.com/4lJL02d5Df
— Sun News (@sunnewstamil) October 13, 2024