NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 46 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டது பூரி ஜெகநாதர் கோவிலின் கருவூலம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    46 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டது பூரி ஜெகநாதர் கோவிலின் கருவூலம்

    46 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டது பூரி ஜெகநாதர் கோவிலின் கருவூலம்

    எழுதியவர் Sindhuja SM
    Jul 14, 2024
    03:05 pm

    செய்தி முன்னோட்டம்

    ஒடிசா பூரியில் உள்ள 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜெகநாதர் கோயிலின் கருவூலமான ரத்னா பந்தர் 46 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று பிற்பகல் மீண்டும் திறக்கப்பட்டது.

    ஒடிசா அரசால் அமைக்கப்பட்ட 11 பேர் கொண்ட குழுவின் உறுப்பினர்கள் இன்று மதியம் ஜெகநாதர் கோவிலுக்குள் நுழைந்து அதன் மரியாதைக்குரிய கருவூலத்தை மீண்டும் திறக்கச் சென்றனர்.

    கருவூலத்திற்குள் நுழைந்தவர்களில் முன்னாள் ஒரிசா உயர் நீதிமன்ற நீதிபதி பிஸ்வநாத் ராத், ஸ்ரீ ஜகன்னாதர் கோயில் நிர்வாகத்தின் (SJTA) தலைமை நிர்வாகி அரபிந்த பதி, ASI கண்காணிப்பாளர் DB கடநாயக் மற்றும் பூரியின் பட்டத்து அரசர் 'கஜபதி மகாராஜா'வின் பிரதிநிதி ஆகியோர் அடங்குவர்.

    ஒடிசா 

    கடைசியாக 1978இல் திறக்கப்பட கருவூலத்தின் உள்புற அறை 

    பட்ஜோஷி மொஹாபத்ரா, பந்தர் மேகப், சதௌகரானா மற்றும் டெயூலிகரன் ஆகிய நான்கு கோவில் பணியாளர்களும் அவர்களோடு கோவில் கருவூலத்திற்குள் நுழைந்தனர்.

    கருவூலத்தை மீண்டும் திறப்பதற்கு ஒப்புதல் கோரும் 'அக்னியா' சடங்கு இன்று காலையில் நிறைவடைந்தது.

    ஜகன்னாதர், சுபத்ரா மற்றும் பாலபத்ரா ஆகிய உடன்பிறந்த தெய்வங்களுக்கு பல நூற்றாண்டுகளாக பக்தர்கள் மற்றும் முன்னாள் மன்னர்கள் நன்கொடையாக வழங்கிய விலைமதிப்பற்ற ஆபரணங்கள் அந்த கருவூலத்தில் உள்ளது.

    அந்த கருவூலம் வெளிப்புற அறை(பஹாரா பந்தர்) மற்றும் உள் அறை(பிதாரா பந்தர்) என பிரிக்கப்பட்டுள்ளது.

    வருடாந்திர ரத யாத்திரையின் போது கருவூலத்தில் வெளிப்புற அறை திறக்கப்பட்டாலும், அதன் உள்புற அறை கடைசியாக 1978இல் திறக்கப்பட்டது

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஒடிசா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    ஒடிசா

    ஒடிசா ரயில் விபத்து: உடல்கள் வைக்கப்பட்டிருந்த பள்ளி இடிக்கப்பட்டது இந்தியா
    ஒடிசா: டாடா ஸ்டீல் ஆலையில் நீராவி குழாய் வெடித்து 19 தொழிலாளர்கள் படுகாயம்  இந்தியா
    இந்திய கால்பந்து அணிக்கு ரூ.1 கோடி பரிசு அறிவித்தார் ஒடிசா முதல்வர் கால்பந்து
    ஒடிசா ரயில் விபத்து நிவாரண நிதிக்கு ரூ.20 லட்சம் நன்கொடை வழங்கிய இந்திய கால்பந்து அணி கால்பந்து
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025