
ராமநாதபுரத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு ஜூலை 17ஆம் தேதி விடுமுறை
செய்தி முன்னோட்டம்
சிவன் கோவில்களில் காசிக்கு அடுத்தபடியாக ராமேஸ்வரம் போற்றி புகழப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள கடலில் குளித்தால் மனிதர்களின் பாவங்கள் கரைந்துவிடும் என்ற நம்பிக்கையும் இந்துக்கள் மத்தியில் நிலவி வருகிறது.
அதே போல், ராமேஸ்வரத்திற்கு சென்று மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்வதை பலரும் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
அதிலும் ஆடி அம்மாவாசை என்றால், ஆயிரக்கணக்கான இந்துக்கள் ராமேஸ்வரத்தில் கூடி தங்கள் பெற்றோர்களுக்கும் மூதாதையர்களும் தர்ப்பணம் செய்ய தவறுவதில்லை.
இதனால், ஆடி அம்மாவாசை அன்று பிற கோவில்களை விட ராமேஸ்வரத்தில் கூட்டம் அலைமோதும்.
இந்த விஷயத்தை கருத்தில் கொண்டு வரும் ஆடி அமாவாசைக்கு(ஜூலை 17) ராமநாதபுரத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
ராமநாதபுரம்: ஜூலை 17ல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
#JUSTIN ராமநாதபுரம்: ஜூலை 17ல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை#Ramanathapuram #news18tamilnadu | https://t.co/7dpn9FD15R pic.twitter.com/5OCuV8sUmN
— News18 Tamil Nadu (@News18TamilNadu) July 15, 2023