சென்னையில் கனமழை, வெள்ளம்: பள்ளிகள் மூடல், அவசர கால எண்கள் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
சென்னை பகுதிகளில் பெய்த கனமழையை தொடர்ந்து, சென்னை, செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும், திருவள்ளூரில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் உள்ள பல தாழ்வான பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது.
சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரில் உள்ள பல தெருக்கள் முழங்கால் அளவு தண்ணீர் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொடர்ந்து பெய்து வரும் மழையால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் உதவி பெற சென்னை மாநகராட்சி ஹெல்ப்லைன் எண்களை அறிவித்துள்ளது.
எனவே, உதவி தேவைப்படும் மக்கள் கீழுள்ள தொலைபேசி எண்களை உடனடியாக தொடர்பு கொள்ளலாம்.
ட்விட்டர் அஞ்சல்
சென்னை வெள்ளத்திற்கான ஹெல்ப்லைன் எண்கள்
Dear #Chennaiites
— Greater Chennai Corporation (@chennaicorp) November 29, 2023
You can call us at 1913 for any grievance or flood related help.
Also please note down the other landline numbers.
We are #HereToServe you.#ChennaiCorporation#ChennaiRains#ChennaiRain pic.twitter.com/zoZIqyJCc3
தவ்க்ப்கஜ்
வங்கக்கடலில் உருவாகும் புயலால் சென்னை பகுதிகளில் கனமழை.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடற்பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. அது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது.
அதன்பிறகு, அது டிசம்பர் 2-ம் தேதி புயலாக வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக, சென்னை மற்றும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
டிசம்பர் 2 மற்றும் டிசம்பர் 3 ஆகிய தேதிகளில், சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் அதிகமான கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் முன்பு தெரிவித்திருந்தது.
ஜிப்பினையூக்கி
தயார் நிலையில் பேரிடர் மீட்புப் படைகள்
புயல் எச்சரிக்கையை கருத்தில் கொண்டு சென்னை, செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 5 தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என்று அதிகாரிகள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ஆந்திரா, கேரளா போன்ற தென் மாநிலங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற யூனியன் பிரதேசங்களிலும் அடுத்த ஐந்து நாட்களுக்கு, அதாவது டிசம்பர் 4 வரை இடியுடன் கூடிய மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
தண்ணீர் தேங்கியதால் மூடப்பட்டுள்ள சுரங்கப்பாதைகளின் விவரங்கள்
Dear #Chennaiites, excluding the Rangarapuram 2-wheeler subway, all other subways are now clear for traffic. #GCC shares it's gratitude to the dedicated workers who worked tirelessly last night to prevent waterlogging.#ChennaiCorporation | #ChennaiRains | #HereToServe pic.twitter.com/mhYlHapKFU
— Greater Chennai Corporation (@chennaicorp) November 30, 2023